Namma Veetu Pillai Tamil Movie: தமிழ்ராக்கர்ஸை மீறி கலெக்ஷனில் சாதித்த ‘நம்ம வீட்டுப் பிள்ளை’
Namma Veetu Pillai Full Movie In TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளம், நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிட்டது. அதைத் தாண்டியும் கலெக்ஷனில் இந்தப் படம் முத்திரை பதித்தது.
Namma Veetu Pillai Full Movie In TamilRockers: தமிழ் ராக்கர்ஸ் இணையதளம், நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிட்டது. அதைத் தாண்டியும் கலெக்ஷனில் இந்தப் படம் முத்திரை பதித்தது.
Namma Veetu Pillai Full Movie Download, Namma Veetu Pillai Full Movie Download TamilRockers, நம்ம வீட்டுப் பிள்ளை, நம்ம வீட்டுப் பிள்ளை ஃபுல் மூவி, சிவகார்த்திகேயன்
Namma Veetu Pillai Tamil Movie vs TamilRockers: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை, பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்புகிறது. சிவகார்த்திகேயன் படங்களில் இதுவே உச்சபட்ச கலெக்ஷனை அள்ளிக் கொடுத்த படமாக பதிவாகியிருக்கிறது. தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் ‘லீக்’ செய்தபோதும், தியேட்டர்களில் கூட்டம் குறையவில்லை.
Advertisment
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த 27-ம் தேதி ரிலீஸான படம், நம்ம வீட்டுப் பிள்ளை. சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பாண்டிராஜ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். சிவகார்த்திகேயன் ஏற்கனவே ஃபேமிலி ஆடியன்ஸிடம் ரீச் ஆகிவிட்டாலும்கூட, ரஜினி முருகன் படத்திற்கு பிறகு அவருக்கு ‘மாஸ் ஹிட்’ அமையவில்லை. அதிலும் கடைசியாக வந்த சீமராஜா, மிஸ்டர் லோக்கல் படம் சிவாவின் ரசிகர்களுக்கு முழு திருப்தியைக் கொடுக்கவில்லை.
இந்தச் சூழலில்தான் சிவகார்த்திகேயன் வெற்றியைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில், நம்ம வீட்டுப் பிள்ளை ரிலீஸ் ஆனது. ஃபேமிலி டிராமாவான நம்ம வீட்டுப் பிள்ளைக்கு ஃபேமிலி ஆடியன்ஸிடம் அமோக வரவேற்பு கிடைத்திருப்பது தியேட்டர்களில் வரும் கூட்டத்தை பார்க்கும்போதே தெரிகிறது.
Advertisment
Advertisements
இந்தப் படத்திற்கு முன்பு ரிலீஸான நடிகர் சூர்யாவின் காப்பான் படத்தை, பாக்ஸ் ஆபீஸில் தூக்கி சாப்பிட்டுவிட்டு நகர்கிறது நம்ம வீட்டுப் பிள்ளை. முதல் 3 நாள் நிலவரப்படி, தமிழ்நாடு கலெக்ஷன் 19.75 கோடி, கர்நாடகா 1 கோடி, கேரளா 60 லட்சம், இந்தியாவின் இதர பகுதிகள் 27 லட்சம் என கலெக்ஷன் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
5 நாள் முடிவில் தமிழ்நாடு கலெக்ஷன் ரூ 31 கோடி என்கிறார்கள், சினிமாத் துறை சார்ந்தவர்கள். அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி மற்றும் அதையொட்டிய வார இறுதி விடுமுறைகளால் கலெக்ஷன் இன்னும் எகிற வாய்ப்பிருக்கிறது. சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் மொத்தம் 58 கோடி கலெக்ஷன் செய்தது. அதை முறியடித்து, 60 கோடியை தாண்டும் முதல் படமாக நம்ம வீட்டுப் பிள்ளை சிவகார்த்திகேயனுக்கு அமைகிறது.
இத்தனைக்கும் படம் ரிலீஸான முதல் நாளே தமிழ் ராக்கர்ஸ் இணையதளம், நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிட்டது. அதைத் தாண்டியும் கலெக்ஷனில் இந்தப் படம் முத்திரை பதித்து வருவது குறிப்பிடத்தக்கது. மக்கள் குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் சுவாரசியமான திரைக்கதையுடன் படம் கொடுத்தால் மாஸ் வெற்றி உறுதி என்பதை விஸ்வாசம், நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற படங்கள் நிரூபிக்கின்றன.