/tamil-ie/media/media_files/uploads/2022/09/Dushara-Vijajan.jpg)
பா.ரஞ்சித் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த படத்தில் நடித்த நடிகை துஷாரா விஜயன் மாட்டு இறைச்சி குறித்து பேசியுள்ளது தற்பொது வைரலாகி வருகிறது.
தமிழ்சினிமாவில் தற்போது முன்னணி இயக்குநராக வலம் வரும் பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு வெளியான படம் நட்சத்திரம் நகர்கிறது. காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், சபீர், உளளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் கடந்த வாரம் வெளியானது. தென்மா இசையமைத்துள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்:திரையில் ஸ்டார்… தரையில் சாதாரண மனிதன்… விஜய் சேதுபதியை நினைத்து நெகிழும் சீனு ராமசாமி!
காதலுக்கு பாலின வேதங்கள் ஜாதி மதங்கள் இல்லை என்பதை சொல்லும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். பொதுவாக ரஞ்சித் படங்களில் பெண் கேரக்டர்கள் ரொம்ப தைரியாசாலியாக இருக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.
அந்த வகையில் சார்பட்டா பரம்பரை படத்தில், மாரியம்மா என்ற தைரியமான பெண் கேரக்டரில் நடித்து கவனம் ஈர்த்த துஷாரா விஜயன் இந்த படத்தில் ரேனே என்ற கேரக்டரில் நடித்து மீண்டும் பாராட்டுக்களை பெற்றுள்ளார். மேலும் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த துஷாரா விஜயன், இந்த படத்திற்காக ஏழு வருடங்கள் காததிருந்ததாகவும், ரஞ்சித் சாருக்கு ரொம்ப நன்றி என்றும் கூறியுள்ளார்.
மேலும், படத்தில் மாட்டு இறைச்சி பற்றிய காட்சிகள் குறித்து பதில் அளித்த அவர், பொதுவான விஷயத்தை பற்றி பேசியிருக்கிறோம். அதுவும் ஒரு உணவுதானே சிக்கன் மாதிரி அதுவும் ஒரு உணவுதான். தயிர் சாதம் பிடித்தால் அதை சாப்பிடலாம். பீஃப் பிடித்தால் அதையும் சாப்பிடலாம் நான் எல்லமே சாப்பிடுவேன். அதில் சர்ச்சயாக்கக்கூடிய வகையில் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.