Nayanthara's Speech : நடிகை நயன்தாரா தென்னிந்திய திரையுலகில் சிறந்த நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு, தனக்கென ஓரிடத்தைப் பிடித்துள்ளார். கடைசியாக 'தர்பார்' படத்தில் ரஜினிகாந்துடன் நடித்திருந்தார். வெகுநாட்கள் கழித்து இவர்கள் இணைவதால், தர்பார் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. இந்நிலையில் 'வேலைக்கரன்' படத்திலில் பெண்கள் முன்னேற்றம் குறித்து இடம்பெற்றிருந்த நயன்தராவின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மகளிர் தினம் நெருங்கி வருவதால், 2017-ல் வெளியான அப்படத்தின் வீடியோ தற்போது வலம் வருகிறது.
Advertisment
சிங்காரச் சென்னை வரலாறு 1 : இது தங்கசாலை தெரு உருவான கதை...
பெண்கள் தாங்கள் விரும்புவதைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமை என்பதைப் பற்றி, வேலைக்காரன் படத்தில் பேசியிருப்பார் நயன்தாரா. அவர்கள் யாராக இருக்க விரும்புகிறார்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் பெண்களுக்கு உண்டு என்று குறிப்பிட்ட அவர்,தற்போதைய சமூக நிலைமை மற்றும் பல இடங்களில் பெண்கள் ஏன் தங்கள் சொந்த தேர்வுகளை நடைமுறைப்படுத்த முடியாமல் போகிறது என்பது குறித்தும் கேள்வி எழுப்பினார்.மார்ச் 8 ஆம் தேதி அதாவது வரும் ஞாயிற்றுக் கிழமை மகளிர் தினம் கொண்டாடப்படுவதால், நயன்தாராவின் இந்த உரை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
2017-ஆம் ஆண்டு வெளியான 'வேலைக்கரன்' படத்தில் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். இயக்குநர் மோகன் ராஜா இயக்கிய இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. ஃபஹத் பாசில் வில்லனாகவும், சினேகா, பிரகாஷ் ராஜ், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், ரோபோ சங்கர் மற்றும் பலர் சப்போர்ட்டிங் பாத்திரங்களிலும் நடித்திருந்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"