Janhvi Kapoor : மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது நினைவு தின பூஜையில், அவரது கணவர் போனி கபூரும், மகள் ஜான்வி கபூரும் கலந்துக் கொண்டனர். இந்த பூஜை சென்னை மைலாப்பூரில் உள்ள ஸ்ரீதேவியின் வீட்டில் நடந்தது.
இன்றைய செய்திகள் Live : ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை இன்று சந்திக்கிறார் ரஜினிகாந்த்
சிங்காரச் சென்னை வரலாறு 1 : இது தங்கசாலை தெரு உருவான கதை…
அந்த பூஜையில் போனி கபூரின் நெருங்கிய உறவினர்கள், மற்றும் நடிகர் அஜித் உள்ளிட்ட நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். புதன்கிழமை காலை சென்னையில் நடந்த அந்த பூஜையில் கலந்துக் கொண்ட ஜான்வி, பூஜையிலிருந்து சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, இதயத்தைப் பிளக்கும் கேப்ஷன்களைக் கொடுத்திருந்தார். ’விஷ் யூ வேர் ஹியர்’ என்று குறிப்பிட்ட ஜான்வி சில படங்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
பிப்ரவரி 24 ஆம் தேதி ஸ்ரீதேவியின் துயர மரணமடைந்தார். அதன் பிறகு, சில மாதங்களுக்குப் பிறகு, 2018 ஜூலையில் பாலிவுட்டில் அறிமுகமானார் ஜான்வி. ஸ்ரீதேவி மற்றும் போனி கபூரின் இளைய மகள் குஷி தற்போது நியூயார்க்கில் படம் சம்பந்தமான படிப்பை படித்து வருகிறார்.
ஸ்ரீதேவி 300 படங்களில் நடித்தார். அவரின் கடைசி படம் ஷாருக்கானின் ஜீரோ. அவரது பகுதிகள் மரணத்திற்கு முன் படமாக்கப்பட்டன. 2018 ஆம் ஆண்டில் அவர் இறந்த பிறகு, ‘மாம்’ படத்திற்காக முதல் தேசிய விருதையும் பெற்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”