/tamil-ie/media/media_files/uploads/2019/07/Nayanthara-Vignesh-Shivan.jpg)
விக்னேஷ் சிவன் - நயன்தாரா
Corona Virus : கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மார்ச் 31 வரை திரையரங்குகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் மக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த பல திரைப்பட பிரபலங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக் கிழமை, கொரோனாவுடன் போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்துக்கள், இஸ்லாமியர்கள் என்று பார்க்காதீர்கள்… மனிதர்களாக உதவுங்கள் – சோயப் அக்தர் வேண்டுகோள்
வீடியோவில், விக்கியும் நயனும் பலவிதமான எமோஜிகளை செய்து காண்பிக்கிறார்கள். இந்த பொழுதுபோக்கு க்ளிப் கொரோனா பீதியில் இருக்கும் ரசிகர்களை சற்று லேசாக்கியுள்ளது. விக்கி நயனின் வீடியோவும், படங்களும் ரசிகர்களை எப்போதும் உற்சாகமாக்கும். அவர்களின் அனைத்துப் படங்களில் இணையத்தில் வைரலாகும்.
Self-isolation and yes Quality time???? #QuarantineLifepic.twitter.com/hI9HiWJSWE
— Nayanthara✨ (@NayantharaU) March 22, 2020
ஞாயிற்ற்குக் கிழமை நடந்த மக்கள் ஊரடங்கு உத்தரவின் ஒரு பகுதியாக, விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கைதட்டிய படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார் விக்கி. தங்களது ஒவ்வொரு கையையும் கொண்டு அவர்கள் கை தட்டிய படமும் அதில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இன் டூ த வைல்ட் வித் பியர் கிரில்ஸ் : ரசிகர்களை உற்சாகமாக்கிய ரஜினி!
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.