இன் டூ த வைல்ட் வித் பியர் கிரில்ஸ் : ரசிகர்களை உற்சாகமாக்கிய ரஜினி!

தன்னுடைய உண்மையான பெயர், பாலச்சந்தரைச் சந்தித்த பிறகு வாழ்க்கையில் நடந்த மாற்றம் என, ஆத்மார்த்தமாகப் பேசினார்.

By: Published: March 24, 2020, 11:21:31 AM

Into The Wild With Bear Grylls : நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்ட ‘மேன் Vs வைல்ட்’ நிகழ்ச்சி அவரது ரசிகர்களுக்கு புதுவித உற்சாகத்தை அளித்தது.

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகி வரும் மேன் Vs வைல்ட் என்ற ரியாலிட்டி ஷோ உலகளாவிய பிரபலமான டிவி தொடர்களில் ஒன்று. நிகழ்ச்சியின் தொகுப்பாளரான பியர் கிரில்ஸ் ஏதாவது ஓரிடத்தில் சிக்கிக்கொள்வார். அது பாலைவனமாகவோ, அடர்ந்த காடாகவோ, மலையாகவோ, சில சமயங்களில் கைவிடப்பட்ட தொழிற்சாலை பிரதேசமாகவோ இருக்கும். அங்கு உள்ள அபாயங்களை அவர் சமாளித்து எப்படி மீண்டும் மனிதர்கள் வாழும் பிரதேசத்திற்கு வருகிறார் என்பதன் சுவாரஸ்யம் தான் இந்நிகழ்ச்சி இன்று வரை வெற்றிகரமாக ஒளிபரப்பாக முக்கியக் காரணம்.

மலை கொரில்லாக்கள் கொரோனாவால் முழுமையாக அழியக்கூடும்!

கடந்தாண்டு இந்நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துக் கொண்டார். அவரைத் தொடர்ந்து 2-வது இந்தியராக நடிகர் ரஜினிகாந்த மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். இது நேற்றிரவு ஒளிபரப்பானது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பந்திப்பூர் வனவிலங்கு சரணாலயத்தில் இந்த நிகழ்ச்சி படமாக்கப்பட்டது. அறிமுகங்கள் முடிந்த பிறகு, பியர் க்ரில்ஸும் ரஜினியும் பேசியபடி நடக்க ஆரம்பித்தார்கள். அப்போது தன்னைப் பற்றி பகிர்ந்துக் கொண்டார் ரஜினிகாந்த். தன்னுடைய உண்மையான பெயர், பாலச்சந்தரைச் சந்தித்த பிறகு வாழ்க்கையில் நடந்த மாற்றம் என, ஆத்மார்த்தமாகப் பேசினார்.

பின்னர் வறண்டுபோன ஆற்றின் மேலே ஐம்பதடி உயரத்தில் அமைந்திருந்த இரும்புப் பாலத்தின் தரைப்பகுதி உடைந்து போயிருக்க, எஞ்சியிருந்த பக்கவாட்டு கம்பிகளைப் பிடித்தபடி அந்த ஆற்றைக் கடக்க வேண்டும் என்ற டாஸ்க்கை எதிர் கொண்டார் ரஜினி. முதலில் சற்றுத் தயங்கினாலும், பிறகு பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துகொண்டு வெற்றிகரமாகக் கடந்தார். இதற்குப் பிறகு காட்டில் மறைத்துவைக்கப்பட்டிருக்கும் ஜீப்பில் ஏறி இருவரும் பயணித்தார்கள்.

பின்னர் ஜீப்பை நிறுத்திவிட்டு தூரத்தில் தெரிந்த தண்ணீரை சேகரிக்க இருவரும் தயாரானார்கள். அப்போது ரஜினிக்கு சிறுசிறு காயங்கள் ஏற்பட்டன. அதற்குள் ஜீப்பின் டயர் பஞ்சராகிவிட்டது. பிறகு டயரை மாற்றிக்கொண்டு இருவரும் மற்றொரு குளத்தை அடைந்தார்கள். அங்கே முதலைகள் கூட இருக்கலாம் என்றார் க்ரில்ஸ். பிறகு அந்த குளத்தின் நடுவில் பொறுத்தப்பட்டிருந்த ஒரு கேமராவை எடுக்க இருவரும் தண்ணீரில் இறங்கி சென்றனர். கேமராவை எடுத்துப் பார்த்தால், அதில் புலி ஒன்று தண்ணீர் குடித்தது பதிவாகியிருந்தது. அதோடு இந்நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.

கொரோனா அச்சுறுத்தல் : டெல்லி ஷாகீன் பாக் போராட்டத்தை அப்புறப்படுத்திய போலீஸார்

”இந்தியாவில் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவை இருக்கின்றன. கலாச்சார ரீதியில் பணக்கார நாடான இந்தியா பொருளாதார ரீதியிலும் பணக்கார நாடாக வேண்டும். இந்தியாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் இருக்கிறார்கள். மற்ற மதங்களுக்கெல்லாம் பல நாடுகள் இருக்கின்றன. ஆனால், இந்து மத்திற்கு இந்தியாவும் குட்டி நாடான நேபாளமும்தான் இருக்கிறது. இருந்தாலும் எல்லோரும் ஒற்றுமையாக வாழ்கிறோம்” என்றார்.

தனது சூப்பர் ஸ்டார் இமேஜை கழட்டி வைத்து விட்டு, எளிய மனிதராக ரஜினி, டாஸ்க்குகளை எதிர்கொண்டது ரசிக்கும் படியாக இருந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Rajinikanth into the wild with bear grylls discovery show

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X