கொரோனா அச்சுறுத்தல் : டெல்லி ஷாகீன் பாக் போராட்டத்தை அப்புறப்படுத்திய போலீஸார்

கூட்டத்தை 50 ஆகக் கட்டுப்படுத்தும் முதல்வரின் உத்தரவுக்கு ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் இணங்குவார்கள் என்று முடிவு செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால், டெல்லி சட்டசபை மற்றும் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக டெல்லியில் நடைபெற்று வந்த ஷாஹீன் பாக் உள்ளிருப்பு போராட்டத்தையும் போலீசார் க்ளியர் செய்துள்ளனர். பெண்களால் நடத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான உள்ளிருப்புப் போராட்டமான இது 100 நாட்களுக்கு மேலாக நடைபெற்றது.

தமிழகத்தில் 144 தடை: செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை என்னென்ன?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், கூட்டம் சேர தடை விதிக்கப்பட்டுள்ளதால், அந்த இடத்தை காலி செய்யுமாறு ஷாஹீன் பாக் மக்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதாக துணை போலீஸ் கமிஷனர் (தென்கிழக்கு) ஆர்.பி மீனா தெரிவித்தார். இருப்பினும், அவர்கள் வெளியேற மறுத்தபோது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் கூறினார்.

Delhi Shaheen Bagh 1

போராட்டத்தை க்ளியர் செய்யும் போலீஸார்கள். படம் : அபிநவ் ஷா

கொரோனா வைரஸுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததோடு, அங்கு 144 சட்டமும் அமலில் உள்ளது. இதற்கு முன்னர், ஜாமியாவுக்கு வெளியே அறிவிக்கப்பட்ட ஒரு போராட்டமும் கடந்த வாரம் ரத்து செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உள்ளிருப்புப் போராட்டத்தை நிறுத்துவது குறித்து விவாதங்கள் நடந்தன. ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு போராட்டக் குழுவை சமாதானப்படுத்தும் நோக்கில், டெல்லி காவல்துறை ஒரு சில ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள் மற்றும் குடியுரிமை நலச் சங்கத்தின் (ஆர்.டபிள்யூ.ஏ) உறுப்பினரான அபுல் ஃபசால் என்க்ளேவ் ஆகியோருடன் ஒரு சந்திப்பை நடத்தியது.

Delhi Shaheen Bagh 1

ஷாகீன் பாக் போராட்டம் நடந்த இடம். படம் : அபிநவ் ஷா

கடந்த வார தொடக்கத்தில், கூட்டத்தை 50 ஆகக் கட்டுப்படுத்தும் முதல்வரின் உத்தரவுக்கு ஷாகீன் பாக் போராட்டக்காரர்கள் இணங்குவார்கள் என்று முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், மாலைக்குள் அந்த இடத்தில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் இருந்தனர். வயதானோர் மற்றும் குழந்தைகளை இனி போராட்டத்தில் அனுமதிக்க மாட்டோம் என்றும்,  குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு அமர்வோம் என்றும் போராட்டக்காரர்கள் கூறினார்கல். அவர்கள் மாஸ்க்குகள் மற்றும் சானிடைஸர்களையும் பயன்படுத்தினர்.

ஞாயிற்றுக்கிழமை, நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடித்தபோது, ஷாஹீன் பாக் போராட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இந்த சம்பவத்திற்கு ‘வெளியாட்கள்’ தான் காரணம் என்று போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டிய நிலையில், போராட்டக்காரர்களுக்கு இடையே உள் மோதல் ஏற்பட்டதா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக போலீசார் கூறினர்.

கேரளாவில் மட்டும் தான் இதெல்லாம் சாத்தியம்!

தென்கிழக்கு டெல்லியின் ஷாஹீன் பாக் நகரில் CAA எதிர்ப்பு போராட்டம்  டிசம்பர் 15 முதல் நடந்து வருகிறது, இதில் 300-க்கும் அதிகமான பெண்கள் பங்கேற்றனர். இது நாடு முழுவதும் இதேபோன்ற பல போராட்டங்களை தூண்டியது.

இதை ஆங்கிலத்தில் படிக்க – Delhi Shaheen Bagh Protest

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close