/tamil-ie/media/media_files/uploads/2020/09/Nazriya-Nazim-Singing.jpg)
நஸ்ரியா நசீம்
பட வெளியீடுகளில் இடைவெளி ஏற்பட்டாலும், தான் செய்யும் நடவடிக்கைகளால் ரசிகர்களை கவனிக்க வைக்கும் அரிய நடிகை தான் நஸ்ரியா.
யார் இடத்தில் யார்? இவர்கள் பிக் பாஸ் 4 போட்டியாளர்களா?
டீன் ஏஜ் பெண்ணாக சினிமாவில் நுழைந்த அவர், நேரம், நையாண்டி, ராஜா ராணி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரக் கூடிய நேரத்தில், தனது 'பெங்களூர் டேஸ்' கோ ஸ்டார் ஃபஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் ஒரு சில மலையாள படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆனால் அவ்வப்போது அவர் சமூக ஊடகங்களில் பகிரும் படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும்.
அந்த வகையில் அவர் தற்போது ஒரு பாடலைப் பாடி அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதியின் ஹிட் பாடலான 'என்டே ஸ்டேட் கேரளமானு' என்ற பாடலையும், மற்றுமொரு ஆத்மார்த்தமான மலையாள பாடலையும் பாட, உடனே அவைகள் வைரலாகி விட்டன.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.