Advertisment

அந்த நடிகருடன் முதல் முத்தக் காட்சி; முடிந்ததும் வாயை டெட்டால் போட்டு கழுவினேன்: பிரபல நடிகை ஓபன் டாக்

முத்தக்காட்சியில் நடிப்பதற்கு முன்னும் பின்னும் பதட்டமாக இருந்தேன்; காட்சி முடிந்ததும் டெட்டால் போட்டு வாயை கழுவினேன்; பிரபல நடிகை ஓபன் டாக்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
neena gupta

நடிகை நீனா குப்தா

நடிகை நீனா குப்தா திரையில் தனது முதல் முத்தக்காட்சிக்கு முன்பும் பின்பும் எவ்வளவு பதற்றமாக இருந்தார் என்பதை நினைவு கூர்ந்தார். நெட்ஃபிலிக்ஸ் ஆந்தாலஜி திரைப்படமான லஸ்ட் ஸ்டோரிஸ் 2 இல் நீனா நடிக்க உள்ளார். ஒரு நேர்காணலில், நீனா முத்தக்காட்சி அனுபவத்திற்குப் பிறகு மிகவும் அதிர்ச்சியடைந்து, கிருமி நாசினியால் வாயைக் கழுவியதாக கூறியுள்ளார். 1990 களின் முற்பகுதியில் தில்லகி சீரியலில் நீனா நடித்தப்போது இந்தச் சம்பவம் நடந்தது.

Advertisment

உடல் ரீதியான நெருக்கத்தை திரையில் காண்பிப்பது அந்த நாட்களில் கேள்விப்படாதது என்றும், இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக திரையில் முத்தக்காட்சி என்று கூறி எபிசோடை விளம்பரப்படுத்திய சேனல் தரப்பின் முடிவு அவர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது என்றும் நீனா கூறினார். "ஒரு நடிகராக நீங்கள் எல்லா வகையான காட்சிகளையும் செய்ய வேண்டும், சில சமயங்களில் சேற்றில் அடியெடுத்து வைக்க வேண்டும், சில சமயங்களில் வெயிலில் பல மணி நேரம் நிற்க வேண்டும்" என்று இன்சைட் பாலிவுட் நிறுவனத்திடம் நீனா கூறினார்.

இதையும் படியுங்கள்: காஞ்சனா படத்தில் நடித்து பெரிய தவறு செய்துவிட்டேன்… திருநங்கை பிரியா வருத்தம்

முத்தக்காட்சி சம்பவத்தை நினைவு கூர்ந்த நீனா, “பல வருடங்களுக்கு முன்பு, நான் திலீப் தவானுடன் ஒரு சீரியலில் நடித்தேன். அந்த சீரியலில் இந்திய தொலைக்காட்சியில் முதன்முதலில் உதட்டோடு உதடு முத்தக் காட்சி இடம்பெற்றது. என்னால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. அவர் நண்பர் போல இல்லை, நாங்கள் ஒருவரையொருவர் பெரிதாக அறிந்திருக்கவில்லை. அவர் நல்ல தோற்றமுடையவர், ஆனால் இந்த சூழ்நிலைகளில் அது உண்மையில் முக்கியமில்லை, ஏனென்றால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நான் தயாராக இல்லை. நான் மிகவும் பதட்டமாக இருந்தேன், ஆனால் அதைச் சமாளிக்க நான் என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன்,” என்று கூறினார்.

நீனா, தான் ஒரு நடிகை என்பதையும், இதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்பதையும் தனக்குத்தானே நினைவூட்டிக் கொண்டார். "சிலரால் நகைச்சுவை செய்ய முடியாது, சிலரால் கேமரா முன் அழ முடியாது. நான் அதை என் தலையில் ஏற்றிக் கொண்டேன், பின்னர் முத்தக் காட்சியில் நடித்தேன். காட்சி முடிந்தவுடன், டெட்டால் கொண்டு வாயை கழுவினேன். எனக்குத் தெரியாத ஒருவரை முத்தமிடுவது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது,” என்று நீனா கூறினார்.

சேனல் இதை பெரிய விஷயமாக நினைத்து, எபிசோடை விளம்பரப்படுத்த முத்தக்காட்சி கிளிப்பைப் பயன்படுத்தியது. ஆனால் அது அவர்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது என்று நீனா கூறினார். அந்த நேரத்தில், அதிக தொலைக்காட்சி சேனல்கள் இல்லை, மேலும் குடும்பங்கள் ஒன்றாக டிவி பார்ப்பார்கள், மேலும் பலர் முத்தக் காட்சியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். எனவே, "சேனல் அந்தக் காட்சியை அகற்ற வேண்டியிருந்தது" என்று நீனா கூறினார். மேலும், “உத்சவ் படத்தில் நான் ஒரு காதல் காட்சியில் நடித்தேன், அது மிகவும் கடினமாக இருந்தது” என்றும் நீனா கூறினார்.

லஸ்ட் ஸ்டோரிஸ் 2 என்பது நெட்ஃபிளிக்ஸின் 2018 ஆந்தாலஜி ஹிட்டின் தொடர்ச்சியாகும், ஆனால் அதன் பின்னணியில் வேறு ஒரு திரைப்படத் தயாரிப்புக் குழு உள்ளது. இந்த முறை நான்கு குறும்படங்கள் சுஜோய் கோஷ், அமித் ரவீந்தர்நாத் சர்மா, ஆர் பால்கி மற்றும் கொங்கோனா சென் சர்மா ஆகியோரால் இயக்கப்பட்டன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bollywood Cinema Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment