Neeya Naana on Vijay TV : ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பாகி வரும் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும். கார சாரம், ஜாலி கேலி என நிகழ்ச்சியின் போக்கு எப்படியிருந்தாலும், பார்வையாளர்களுக்கு பரவசம் தான்.
கண்களில் உணர்ச்சி பொங்க கைகளில் ஆஸ்கர்! – படங்கள் உள்ளே
அந்த வகையில் இந்த வாரம் ’தமிழ் பசங்கக் கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன?’ என்ற கேள்வி வட இந்திய பெண்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, “எப்போவுமே எந்த விஷய்மானாலும், எந்த நேரமானாலும் உதவி செய்வாங்க, அவங்க ஸோ ஹெல்ப் ஃபுல்” என்றார் ஒரு பெண். அடுத்த பெண்ணோ, “ஒருவாட்டி பழகிட்டாங்கன்னா, எப்போவும் அதே நட்பை தொடருவாங்க” என்றார். அடுத்ததாகப் பேசிய இன்னொரு பெண், “எப்போதும் அவர்கள் பாதுகாப்பானவர்கள். ஃபேஷனை பத்தி சொல்லணும்ன்னா, ஜீன்ஸ் டி-ஷர்ட்ட விட, வேஷ்டி – சட்டைல அவங்க ரொம்ப ஆஸமா இருக்காங்க” என்றார்.
தமிழ் பசங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விசயம் என்ன?! ????☺
நீயா நானா – ஞாயிறுகளில் காலை 11:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana #VijayTelevision முழுப்பகுதி – https://t.co/5zS9F2vx9M pic.twitter.com/8kxMX32A37
— Vijay Television (@vijaytelevision) February 10, 2020
இந்தக் கேள்விக்கு அடுத்ததாக பதிலளித்த மற்றுமொரு பெண், “அவர்கள் எப்போதுமே ஆட்டிட்யூட் காட்ட மாட்டார்கள். எப்போவும் டவுன் டூ எர்த்” மனநிலையில் இருப்பார்கள் என்றார். இன்னொரு பெண்ணோ, தமிழ் பசங்களின் மீசை ரொம்பவும் பிடிக்கும் என்றார். வட இந்திய ஆண்களை விட, மீசை தமிழ் பசங்களுக்கு தான் நன்றாக இருக்கிறது என்றார்.
இளம் வயதில் தென் அமெரிக்க சிகரத்தை தொட்ட இந்திய மாணவி!
அதோடு, தமிழ் பசங்க இந்தியில் பேச முயற்சி செய்யும் போது கியூட்டாக இருப்பார்கள் என்றார் இன்னொரு பெண். எதாவது பிரச்னை என்றால் அவர்கள் ஒற்றுமையாக இருப்பார்களே அது தான் எனக்குப் பிடிக்கும் என்றார் மற்றொரு பெண். இந்த வீடியோவைப் பார்த்த தமிழ் பசங்க கெத்தாக காலரை தூக்கி விட்டுக் கொள்கிறார்கள்.