Neitizens ask Aathmika indirectly attack aditi Shankar on twitter: இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கருக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், நடிகை ஆத்மிகாவின் ட்வீட் அதிதிக்கு எதிராக உள்ளதாக என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைத்து சினிமா துறையிலும் வாரிசுகளின் ஆளுமை நிறைந்துள்ளது. சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து பாலிவுட்டில் நெபோடிசத்திற்கு எதிரான குரல் ஓலித்து வருகிறது. இந்த நிலையில், தற்போது கோலிவுட்டில் நெபோடிசத்திற்கு எதிராக நடிகை ஆத்மிகா ட்வீட் போட்டிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இதையும் படியுங்கள்: அரசியல்வாதி மாப்பிள்ளை… கீர்த்தி சுரேஷ், ஹன்சிகா கல்யாண வதந்திகளில் எது நிஜம்?
ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வெளியான மீசையை முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆத்மிகா. அடுத்து நடித்த நரகாசூரன், கண்ணை நம்பாதே உள்ளிட்ட படங்கள் கிடப்பில் உள்ளன. பின்னர் விஜய் ஆண்டனியுடன் கோடியில் ஒருவன் படத்தில் நடித்திருந்தார். தற்போது காட்டேரி படத்தில் நடித்துள்ளார்.
இந்தநிலையில், நடிகை ஆத்மிகா, செல்வாக்கு மிக்கவர்களுக்கு ஏணி வழியாக எளிதாக செல்ல முடிகிறது, ஆனால் மற்றவர்களுக்கு... 'பார்த்துக்கலாம்' என ட்வீட்போட்டுள்ளார்.
இதனையடுத்து, 5 ஆண்டுகளாக சினிமாவில் இருந்தும் ஆத்மிகாவுக்கு கிடைக்காத வாய்ப்புகள் அதிதி ஷங்கருக்கு கிடைத்திருப்பது தான் இந்த ட்வீட்டுக்கான காரணம் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் முதல் படத்திலேயே நடிகர் கார்த்தி உடன் விருமன் படத்தில் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி அறிமுகமாக உள்ளார். அடுத்ததாக சிவகார்த்திகேயன் உடன் மாவீரன் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார்.
அதிதிக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் கிடைப்பதால், கடுப்பான ஆத்மிகா இப்படியொரு ட்வீட் போட்டுள்ளார் என்றும் கோலிவுட்டிலும் நெபோடிசம் பிரச்சனை பெரிதாகிறது என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் இயக்குநர் டிகே இயக்கத்தில் வைபவ், ஆத்மிகா நடிப்பில் உருவான காட்டேரி திரைப்படம் ஒரு வழியாக பல ஆண்டுகள் கழித்து இன்று வெளியாகி உள்ள நிலையில், அந்த படத்திற்கான ப்ரோமோஷனுக்காக இப்படியொரு ட்வீட் போட்டிருக்கிறாரா ஆத்மிகா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil