Ner konda Paarvai First Day Collection : ரஜினி, அஜித், விஜய்... இவர்கள் மூவர் தான் இன்றைய தமிழ் சினிமாவின் டாப் 3 வசூல் மன்னர்கள். இதில், நம்பர்.1, 2, 3 என்றெல்லாம் யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. படத்தின் இயக்குனர், விளம்பரம், டீசர், டிரைலர் என பல சமாச்சாரங்களின் கலவையில் உருவாகும் எதிர்பார்ப்பை பொறுத்து, வரிசைப்படுத்துதல் அமையும்.
அதிலும், முதல் நாள் கலெக்ஷனில் யார் கிங்? என்ற போட்டி தான் இங்கே முதன்மையானது. இந்த மாதம் அஜித் படம் ஒன்று ரிலீசானால், அது இதற்கு முந்தைய மற்ற படங்களின் முதல் நாள் வசூலை முறியடிக்கும். நான்கு மாதம் கழித்து விஜய் படம் வெளியானால், அது அஜித்தின் படம் உட்பட அனைத்து முதல் நாள் வசூலையும் உடைக்கும். அடுத்த 3 மாதத்தில் ரஜினி படம் வெளியானால், அது ஒட்டுமொத்த ஹிஸ்டரியையும் மீண்டும் மாற்றி எழுத வைக்கும்.
சங்கு சக்கரம் போல இது சுற்றிக் கொண்டே இருக்கும். இது புரியாமல், தலடா.. தளபதி டா... என அதுப்பு காட்டுவது ரசிகர்களின் வாடிக்கை.
மேலும் படிக்க - Ner Konda Paarvai In Tamilrockers: நேர்கொண்ட பார்வை படத்தை லீக் செய்த தமிழ் ராக்கர்ஸ்
இந்நிலையில், ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திக்கும் நேர்கொண்ட பார்வை திரைப்படம், சென்னையில் ரஜினியின் பேட்ட படத்தின் முதல்நாள் வசூலை பிரேக் செய்துள்ளது.
சென்னையில் பேட்ட முதல் நாள் வசூல் - 1.12 கோடி
சென்னையில் நேர்கொண்ட பார்வை முதல் நாள் வசூல் - 1.58 கோடி
தவிர, 2017ல் வெளியான அஜித்தின் 'விவேகம்' பட முதல் நாள் கலெக்ஷனான 1.21 கோடியையும், நேர்கொண்ட பார்வை பிரேக் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், சென்னையில் அதிகபட்ச முதல் நாள் வசூல் செய்த படங்கள் 2.0 (2.64 கோடி) மற்றும் சர்கார் (2.41) சாதனையை நேர்கொண்ட பார்வை முறியடிக்கவில்லை. ஒட்டுமொத்தமாக, தமிழகத்தில் முதல் நாளில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் 14 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிகிறது.