TamilRockers Leaked NGK Full Movie in online to Free Download: என்.ஜி.கே. படம் ரிலீஸ் நாளிலேயே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் லீக் ஆனது. அதில் Free Download செய்ய இணையவாசிகள் முட்டி மோதுவதால், படத்தின் வசூல் பாதிக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே இன்று தேவி 2 படத்தையும் இணையதளத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்.
நடிகர் சூர்யா நடிப்பில் NGK Movie இன்று (மே 31) வெளியானது. இதில் ரகுல் பிரீத்சிங், சாய் பல்லவி ஆகியோர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்கள். இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் இந்தப் படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது.
இந்தப் படத்திற்கான ரிவியூ, NGK Review கலவையாக வந்திருக்கிறது. எனினும் அரசியலை மையப்படுத்தி வந்திருக்கும் இந்த அதிரடி படம், சூர்யா ரசிகர்களுக்கு நல்ல விருந்து.
இந்தச் சூழலில் இன்று (மே 31) படம் ரிலீஸான சில மணி நேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் திருட்டுத்தனமாக ஆன் லைனில் என்.ஜி.கே படத்தை முழுவதுமாக வெளியிட்டது. சமீப காலமாகவே இப்படி ரிலீஸ் அன்றே படக்களை இணையதளத்தில் வெளியிடுவதை தமிழ் ராக்கர்ஸ் வாடிக்கையாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: இணையத்தில் தேவி 2, முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
TamilRockers இணையதளத்தின் இந்த அட்டகாசத்திற்கு திரைத்துறை முடிவு கட்டவில்லை. அவ்வப்போது தனது இணையதள முகவரியை மாற்றிக்கொண்டு தொடர்ந்து படங்களை வெளியிட்டு வருகிறது தமிழ் ராக்கர்ஸ்.
Read More: தமிழ் சினிமாவை வேட்டையாடும் தமிழ் ராக்கர்ஸ்: தினமும் ரிலீஸ் திருவிழா
இதற்கிடையே பிரபுதேவா – தமன்னா நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான தேவி 2 படத்தையும் இன்று திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ். இதனால் படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Ngk full movie leaked to free download in tamilrockers