தமிழ் சினிமாவை வேட்டையாடும் தமிழ் ராக்கர்ஸ்: தினமும் ரிலீஸ் திருவிழா

Tamil Movies In Tamilrockers: நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும், புதிது புதிதாக இணையதள முகவரியை மாற்றிக்கொண்டு தமிழ் ராக்கர்ஸ் வந்து விடுகிறது.

tamil movie 2019, tamil movie 2019 download tamilrockers, தமிழ் மூவி, தமிழ் ராக்கர்ஸ், tamilrockers 2019 movies download
tamil movie 2019, tamil movie 2019 download tamilrockers, தமிழ் மூவி, தமிழ் ராக்கர்ஸ், tamilrockers 2019 movies download

Tamilrockers leaked Tamil Movies: தமிழ் சினிமா தியேட்டரில் ரிலீஸ் ஆகிறதோ இல்லையோ, தமிழ் ராக்கர்ஸில் தினம் ஒரு படம் ரிலீஸ் ஆனபடியேதான் இருக்கிறது. அதுவும் புதுப்படங்கள் தியேட்டருக்கு வந்த அன்றே ஆன் லைனில் வெளியிடுவது, வேறு எங்கும் நடக்காதது! இதில் லேட்டஸ்ட் பாதிப்பு, என்.ஜி.கே. திரைப்படம். இத்ற்கிடையே இன்று தேவி 2 படத்தையும் ஆன் லைனில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ்.

Read More: என்.ஜி.கே. படத்தை முதல் நாளே வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்

தமிழ் ராக்கர்ஸ் இணையதளம், சினிமா உலகுக்கே பெரும் மிரட்டலாக இருந்து வருகிறது. கோலிவுட், டோலிவுட், மாலிவுட், பாலிவுட், ஆலிவுட் என தமிழ் ராக்கர்ஸில் வெளியாகாத மொழிப் படங்களே இல்லை.

Read More: இணையத்தில் தேவி 2, முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்

சினிமாப் படம் ஒன்று தியேட்டரில் ரிலீஸாகி, அடுத்த சில மணி நேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திலும் வெளியாகிவிடுவதுதான் கொடுமை. லேட்டஸ்டாக பேட்ட, விஸ்வாசம், மாரி 2, சூப்பர் டீலக்ஸ், கனா, காஞ்சனா 3, மிஸ்டர் லோக்கல் என பல படங்களை இப்படி ரிலீஸ் செய்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ்.

tamil movie, tamilrockers, Tamil cinema, ngk tamil movie

Tamil Movies To Free Download In Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் தினம் ஒரு படம் ரிலீஸ்

அதுவும் காஞ்சனா 3 படத்திற்கு ஆன் லைனில் கிடைக்கும் வரவேற்பை பார்த்துவிட்டு, அடுத்தடுத்து ஹெச்.டி. பிரிண்ட்களை இறக்கி விட்டபடி இருக்கிறது தமிழ் ராக்கர்ஸ். இந்தச் சூழலில் கோடை விடுமுறையின் இறுதி வாரத்தை குறி வைத்து என்.ஜி.கே., தேவி 2 ஆகிய படங்கள் இன்று (மே 31) ரிலீஸ் ஆகின.

இவற்றில் என்.ஜி.கே. படம், செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்தது. தேவி 2 படத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்திருக்கிறார்கள். இவற்றில் என்.ஜி.கே. படத்தை ரிலீஸ் ஆன சில மணி நேரங்களில் ஆன் லைனில் வெளியிட்டு அதிர வைத்திருக்கிறது தமிழ் ராக்கர்ஸ். தேவி 2 படத்தையும் எப்போது தமிழ் ராக்கர்ஸ் வெளியிடுமோ? என பீதியில்தான் இருக்கிறது படக்குழு.

தமிழ் ராக்கர்ஸ் இதுபோல புதுப்படங்களை வெளியிடுவதை எதிர்த்து பல்வேறு திரைப்பட நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றன. என்னதான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும், புதிது புதிதாக இணையதள முகவரியை மாற்றிக்கொண்டு தமிழ் ராக்கர்ஸ் வந்து விடுகிறது.

ஆன் லைனில் தமிழ் ராக்கர்ஸில் படம் பார்த்து பழகிய ரசிகர்களும் அதை விடுவதாக இல்லை. தியேட்டர்களில் எகிறிய டிக்கெட் கட்டணம், பார்க்கிங் கட்டணம் ஆகியவை ஒரு காரணம் என்றால், கொளுத்தும் கோடை வெயில் இன்னொரு காரணம்.


சட்டத்தாலும் திரைத்துறையினராலும் தடுத்து நிறுத்த முடியாத தமிழ் ராக்கர்ஸை, சினிமா ரசிகர்களின் மன மாற்றம்தான் தடுத்து நிறுத்த முடியும். செய்வீர்களா, நீங்கள் செய்வீர்களா?

இதற்கிடையே பிரபுதேவா, தமன்னா நடிப்பில் வெளியான தேவி 2 படத்தையும் இன்று ஆன்லைனில் வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ். இதனால் இந்தப் படங்களின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் பாதிக்கப்படும் சூழல் உருவாகியிருக்கிறது.

 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ngk tamil movie tamilrockers devi

Next Story
பாகுபலி பிரச்சனை… நடிகனாக இருப்பது குற்றமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express