கோலிவுட்டின் மற்றொரு ஜோடி: காதலில் ஆதி-நிக்கி கல்ராணி?

நிக்கி கல்ராணி பெங்களூருவைச் சேர்ந்தவர். இந்த பூட்டுதலில் அவர் ஆதியின் வீட்டிற்கு பிறந்தநாள் விழாவுக்கு வந்தது, பல யூகங்களுக்கு வழி வகுத்துள்ளது. 

நிக்கி கல்ராணி பெங்களூருவைச் சேர்ந்தவர். இந்த பூட்டுதலில் அவர் ஆதியின் வீட்டிற்கு பிறந்தநாள் விழாவுக்கு வந்தது, பல யூகங்களுக்கு வழி வகுத்துள்ளது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nikki Galrani Aadhi Pinisetty in Love

நிக்கி கல்ராணி - ஆதி

'டார்லிங்’ படத்தில் அறிமுகமான நிக்கி கல்ராணி, அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஏராளமான ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது 'ராஜவம்சம்' படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராய், ஆராத்யா மருத்துவமனையில் அனுமதி

Advertisment

தற்போது நிக்கி கல்ராணி நடிகர் ஆதியுடன் டேட்டிங் செய்கிறார் என்றும், இரு குடும்பங்களின் ஆசீர்வாதத்துடன் தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல அவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் சலசலப்பு தொடங்கியுள்ளது. ஜூலை 14-ஆம் தேதி சென்னையில் உள்ள ஆதியின் வீட்டில் அவரது அப்பா, இயக்குனர் ரவிராஜா பினிசெட்டியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதில் நிக்கியும் கலந்துக் கொண்டார், இதௌயடுத்து அவர்களின் காதல் செய்தி நம்பகத்தன்மையைப் பெற்றுள்ளது.

நிக்கி கல்ராணி பெங்களூருவைச் சேர்ந்தவர். இந்த பூட்டுதலில் அவர் ஆதியின் வீட்டிற்கு பிறந்தநாள் விழாவுக்கு வந்தது, பல யூகங்களுக்கு வழி வகுத்துள்ளது.  நிக்கியும் ஆதியும் முதன்முதலில் 2015-ம் ஆண்டு வெளியான 'யாகாவராயினும் நா காக்க' என்ற படத்தில் ஒன்றாக நடித்தார்கள். அன்றிலிருந்து நல்ல நண்பர்களாக இருந்து, 'மரகத நாணயம்' படத்தில் மீண்டும் இணைந்தனர்.

நோய் எதிர்ப்பு சக்தி: சிவப்பு அரிசி ஏன் அவசியம் தெரியுமா?

இதற்கிடையே நிக்கியும் ஆதியும் தங்கள் உறவைப் பற்றி இன்னும் வாய் திறக்கவில்லை. தற்போது 'பார்ட்னர்', 'க்ளாப்' மற்றும் 'குட் லக் சகி' ஆகியப் படங்களில் ஆதி பிஸியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment
Advertisements

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Tamil Cinema Nikki Galrani

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: