குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகியாக உயர்ந்தவர்களில் நித்யா மேனன் குறிப்பிடத் தகுந்தவர். தனது 10 வயதில் நடிக்க வந்து இப்போது முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கிறார். மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருந்த நேரத்தில் ‘180’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இவர் அறிமுகமானார்.
சீரியலுக்கு பிரேக்: இன்ஸ்டாவுக்கு எஸ்! ஃபோட்டோ பிரியை பவானி ரெட்டி!
Introducing @MenenNithya as singer “ #ShailaputriDevi “ from #GAMANAM (A Multi-language film), unveiled by @ImSharwanand
Others *ring @shriya1109 @iam_shiva9696 @ItsJawalkar
Directed by @sujanara0
???? #Ilaiyaraaja
????️@gnanashekarvs
????@RameshKarutoori@GamanamMovie #GAMANAM pic.twitter.com/Y1qLb3ZZs7— Diamond Babu (@idiamondbabu) September 18, 2020
அதன் பிறகு, காஞ்சனா, ஒ காதல் கண்மணி உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மெர்சல் படத்தில் விஜய்க்கு ஜோடியாக களமிறங்கி தனது அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தினர். இறுதியாக உதயநிதி நடிப்பில் வெளியான சைக்கோ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நித்யா மேனன்.
மாடியில் தோட்டம்.. வீக்லி ஃபோட்டோ ஷூட்.. ரம்யா பாண்டியன் இன்ஸ்டா மேஜிக்!
இந்நிலையில் ‘கமனம்’ என்ற படத்தில் தற்போது ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி என 5 மொழிகளில் உருவாகிறது. இதில் ஷைலபுத்ரி தேவி என்ற பாடகியாக நடிக்கிறார் நித்யா மேனன். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இதற்கு முன்பு அவர் நடித்திருந்த சைக்கோ படத்துக்கு இசைஞானி இசையமைத்திருந்தாலும், முன்னணி கதாபாத்திரமாக அதுவும் பாடகியாக நித்யா நடிக்கும் படத்துக்கு இசைஞானி இசையமைப்பது கவனம் ஈர்த்திருக்கிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Nithya menen singer shailaputri devi gamanam movie ilaiyaraaja
தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
தமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!