scorecardresearch

அந்த சீரியலில் நான் நடிச்சிருக்க கூடாது: நடிகை நித்யா ரவீந்தர்

அந்த நெகட்டிவ் கேரக்டருக்கு என்னால் டப்பிங் பேச முடியவில்லை, அதில் நடித்தது தான் நான் செய்த தவறு; சீரியல் நடிகை நித்யா ரவீந்தர்

Nithya Ravindar
நடிகை நித்யா ரவீந்தர்

இப்ப சீரியல்களில் பலரும் புதிய ஆட்கள் வேண்டும் என்று கேட்கிறார்கள். அப்போ 20 வருஷத்துக்கு முன்னாடி இருக்கிறவங்க எல்லாம் எங்கே போவாங்க என்று சீரியல் நடிகை நித்யா ரவீந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை நித்யா ரவீந்தர் கதாநாயகியாகவும், முன்னணி கேரக்டர்களிலும் நடித்து உள்ளார். 5 வயதிலேயே நடிப்பை தொடங்கிய நித்யா இப்ப வரைக்கும் 75க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: ‘அம்மாவை கடைசி வரைக்கும் பார்க்க முடியல’ பவித்ரா லட்சுமியிடம் மன்னிப்பு கேட்ட புகழ்

இதுதவிர சின்னத்திரையிலும் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் சன் டிவியில் முடிவடைந்த கண்ணான கண்ணே, நம்ம வீட்டு பொண்ணு, தாலாட்டு, சுந்தரி என பல சீரியல்களிலும் நித்யா இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சில மாதங்களாகவே நித்யா எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. அதற்கு காரணம் இவர் 6 மாதங்களாக நடிப்பிற்கு பிரேக் விட்டு, வெளிநாட்டிற்கு தனது பேரக்குழந்தையை பார்ப்பதற்காக சென்று உள்ளார்.

இந்தநிலையில், ஒரு பேட்டியில் பேசிய நித்யா ரவீந்தர், “நித்யா என்றால் அவருக்கு பாசிட்டிவ் கேரக்டர்தான். அவர் ஒரு அழகான பாசமான அம்மாவாக இருப்பார். மேலும், வீட்டில் உள்ள பாசமான ஒரு கேரக்டராக தான் ரசிகர்கள் பார்த்திருப்பார்கள். ஆனால் அவருக்குள் பல திறமைகள் இருக்கிறது என்பதை வெளிக்காட்ட முடியவில்லை. ஆரம்பத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்திருந்தாலும் தற்போது எனக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததற்குக் காரணம் நான் அதிகமாக சீரியல்களில் கவனம் செலுத்தியது தான். இப்போது பலரும் என்னை சீரியல் நடிகை என்ற பெயரால் முத்திரை குத்தி விட்டார்கள். அதனால் தான் எனக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்துவிட்டன என்று நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

மேலும், என்னுடைய வாழ்வில் நான் இந்த ஒரு கேரக்டரில் மட்டும் நடித்து இருக்கக் கூடாது என்றால், அந்த சீரியலின் பெயரை நான் சொல்ல மாட்டேன். அதில் என்னை நடிப்பதற்காக கூப்பிட்டார்கள். இன்னொரு நபர் நடித்துக் கொண்டிருந்த நிலையில் அவர் திடீரென்று விலகியதால் என்னை நடிக்க கூப்பிட்டார்கள். ஆனால் அது நெகட்டிவ் கேரக்டர், எனக்கு அது செட் ஆகவில்லை. நான் நடிப்பதை கூட நடித்து முடித்துவிட்டேன். அந்த நெகட்டிவ் கேரக்டருக்கு என்னால் டப்பிங் பேச முடியவில்லை, அந்த ஒரு கேரக்டர்தான் நான் நடித்ததில் தவறாக செய்துவிட்டேன் என்று எனக்கு தோன்றியது. இத்தனை வருடங்களில் எனக்கு வேறு எந்த பிரச்சனைகளும் சினிமாக்களில் இல்லை. நான் நடித்ததில் இந்த ஒரு சீரியலில் மட்டும் தான் நெகட்டிவாக நடித்தேன், அது தவறு என்றும் நித்யா கூறியிருக்கிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Nithya ravindar talk about her only negative role in serial

Best of Express