scorecardresearch

பொன்னியின் செல்வன் படத்தின் நிழல்கள் ரவி: என்ன கதாபாத்திரம் தெரியுமா?

இந்த காவிய படத்தில் ஆழ்வார்கடியான் நம்பி என்ற கதாபாத்திரத்தில் ஜெயராம் நடிக்கவுள்ளார்.

Nizhalgal Ravi to Play Important Role in Ponniyin Selvan
நிழல்கள் ரவி

புகழ்பெற்ற இயக்குனர் மணிரத்னம் அவர்களின் ’பொன்னியின் செல்வன்’ படக்குழு, படப்பிடிப்பை தொடங்குவதற்காக, பூட்டுதல் முடிவடையும் வரை காத்திருக்கிறது. இதில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரபு, மற்றும் ஜெயராம் ஆகிய நட்சத்திர பட்டாளங்கள் ஏற்கனவே இணைந்துள்ளனர். சமீபத்திய விஷயம் என்னவென்றால், மூத்த நடிகர் நிழல்கள் ரவியும் இப்படத்தில் இணைந்துள்ளார். படத்தில் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் நடிக்கவுள்ளார்.

தமிழகத்தில் இ-பாஸ் ரத்து எப்போது? ஆக.29-ல் முதல்வர் முக்கிய ஆலோசனை

பிரபுவும் சரத்குமாரும் முறையே பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் ஆகிய ரோலில் நடிப்பதாக, முன்னர் செய்திகள் வெளியானது. தற்போது சரத்குமார் கதாபாத்திரத்தை நிழல்கள் ரவி மாற்றியுள்ளார். இதனால் சரத்குமார் மற்றொரு வேடத்தில் நடிக்கப்போவதாக தெரிகிறது. சுவாரஸ்யமாக, ஐஸ்வர்யா ராய் பச்சன் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அதாவது நந்தினி (பெரிய பழுவேட்டரையரின் மனைவி) மற்றும் ராணி மண்டகினி தேவி என 2 கதாபாத்திரங்களில் அவர் நடிக்கவிருக்கிறார்.

நம்ம ஊர் பரோட்டா.. பக்குவமாய் செஞ்சா உங்கள அடிச்சிக்க ஆளே இல்ல போங்க!

படப்பிடிப்பை தொடங்க அரசாங்கத்தின் அனுமதிகளுக்காக இந்த குழு காத்திருப்பதாக கூறப்படுகிறது. படபிடிப்பை ஒரே நேரத்தில் முடித்து, இரண்டு பகுதிகளாக வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க குழு திட்டமிட்டுள்ளது. மேலும் ’பொன்னியின் செல்வன்’ குழு படப்பிடிப்புக்காக மத்திய பிரதேசத்தில் இருப்பிடங்களை தேர்வு செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த காவிய படத்தில் ஆழ்வார்கடியான் நம்பி என்ற கதாபாத்திரத்தில் ஜெயராம் நடிக்கவுள்ளார்.

தொழில்நுட்பக் குழுவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் அடங்குவர்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Nizhalgal ravi to play chinna pazhuvettarayar role in maniratnams ponniyin selvan