Oscar 2019 : ஆஸ்கர் 2019 விருது விழாவிற்கு பிரபல ஹாலிவுட் நடிகர் பில்லி போர்டர் கவுன் அணிந்து வந்தது உலகையே ஆச்சரியப்படுத்தி உள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2019/02/D0M10A7UYAEtiF--576x1024.jpg)
உலக திரையுலகில் ஆஸ்கர் விருது என்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த விழா, ஒவ்வொரு ஆண்டும், மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்படுவது வழக்கம்.
ஆஸ்கர் 2019 : வெற்றி கிரீடம் சூடினார் கோவை அருணாச்சலம் முருகானந்தம்.. யார் இவர்?
அந்த வகையில், 91வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடந்தது. ஆஸ்கர் விழா என்றாலே பிரபலங்கள் அழகு அழகாக உடை அணிந்து வருவார்கள். நடிகைகள் டிசைனர் கவுன்களில் சிவப்புக் கம்பளத்தில் நடந்து வரும் அழகே அழகு.
ஆஸ்கர் விழாவில் கவுன் அணிந்து வந்த பில்லி போர்டர்
இந்நிலையில் ஹாலிவுட் நடிகர் பில்லி போர்டர் டக்சீடோ கவுன் அணிந்து வந்து அனைவரையும் தன்னை பற்றியே பேச வைத்துவிட்டார். அந்த புகைப்படம் தற்போது சமூக வளைதலங்களில் வைரலாக பரவி வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2019/02/D0NCegzWwAQxZtu-1021x1024.jpg)
இதனை நெட்டிசன்கள் பலரும் கேலி செய்து சிரித்து வருகின்றனர். ஆனால் இதற்கு பில்லி போர்டர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்திருக்கிறார்.
அதில், “ஆஸ்கருக்கு வரும்போது நல்ல உடை அணிந்து வரவேண்டும். இந்த ஆடையை எனக்கு வடிவமைத்து கொடுத்தவர்களுக்கு நன்றி. இதில் நான் நன்றாக உணர்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.