ஆஸ்கர் விருது விழா நாளை நடைபெற உள்ள நிலையில், கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தத்தின் பீரியட் படம் விருதை பெறுமா என்ற எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
உலகளவில் வழங்கப்படும் திரை விருதுகளில் ஆஸ்கார் என்பது மிகவும் பெருமையான ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் ஹாலிவுட் படங்களுக்கு பலப் பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டுப் படங்களுக்கும் தனிப்பிரிவில் விருது வழங்கப்படுகிறது. மேலும் சிறந்த குறும்படம் மற்றும் ஆவணப்படம் ஆகியப் பிரிவுகளின் கீழும் விருதுகள் வழங்கப்பட உள்ளது.
ஆஸ்கர் விருது விழா : விருதை பெறுமா பீரியட் குறும்படம்?
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் வழங்குவதற்கு முன்பு அல்லது பின்னர் பல சர்ச்சைகள் வெடிப்பது வழக்கம்தான். இந்த ஆண்டும் அதேபோல விருது வழங்கும் நிகழ்ச்சி நீண்ட நேரத்தை எடுத்துக்கொள்வதால் சிறந்த ஒளிப்பதிவு, எடிட்டிங், லைவ் ஆக்ஷன் குறும்படம் மற்றும் மேக்கப் & ஹேர்ஸ்டைல் ஆகிய விருதுகள் வழங்கப்படும்போது விளம்பரதாரர்களின் விளம்பரங்கள் ஒளிப்பரப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் ரசிகர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட துறையினர் கோபமடைந்து தங்கள் கண்டனங்களை ஆஸ்கர் கமிட்டிக்கு எதிராகப் பதிவு செய்தனர். இதனால் ஆஸ்கர் கமிட்டிப் அனைத்து விருதுகளும் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பப்படும் என அறிவித்தனர். இதையடுத்து அனைத்து சர்ச்சைகளும் ஓய்ந்துள்ள நிலையில் நாளை ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற இருக்கிறது. இதனை இந்திய நேரத்தில் நாளைக் காலை 7 மணி முதல் நேரலையில் தொலைக்காட்சிகளில் காணலாம்.
ஆஸ்கர் விருதுக்கு தேர்வானது தமிழரின் படம்... மகிழ்ச்சியில் கோவை மக்கள்
இந்த விருது விழாவில் குறும்படம் பட்டியலில்,கோவையை சேர்ந்த தமிழர் ஒருவர் நடித்துள்ள பீரியட். எண்ட் ஆஃப் செண்டென்ஸ் குறும்படம் இடம்பெற்றுள்ளது. மாதவிடாய் குறித்த மூட நம்பிக்கைகளை இந்திய பெண்கள் எப்படி எதிர்த்து போராடுகிறார்கள் என்பது பற்றி ஈரானிய – அமெரிக்கரான ரைகா ஜெஹ்தாப்சி எடுத்துள்ள ‘பீரியட் எண்ட் ஆஃப் செண்டென்ஸ்’ என்கிற டாக்குமெண்டரி ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வட இந்தியாவில் உள்ள ஹார்பூர் எனும் பகுதியில் வசிக்கும் பெண்களிடம் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த டாக்குமெண்டரி வீடியோ 26 நிமிடங்கள் நீடிக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்லம்டாக் மில்லிநேர் இரண்டுக்கும் மேற்பட்ட ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றது. இந்தியர்கள் அனைவரும் தொலைகாட்சி முன்பு ஆர்வமும் பதற்றமும் நிறைந்து உட்கார்ந்திருந்த நேரம் அது. தற்போது அதே போன்று ஒரு எதிர்பார்ப்பை இந்த குறும்படம் அளித்திருக்கிறது.