உலகமே உற்றுநோக்கும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
ஹாலிவுட் பவுல்வார்ட்டில் உள்ள டால்பி திரையரங்கத்தில் நடைபெறும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவானது, இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.
ஆஸ்கர் விருது விழா கடந்த 4 வருடங்களாக தொகுப்பாளர்கள் இன்றி நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ், ஏமி ஸ்கூமர் , ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். ஆஸ்கர் விருது விழாவை மூன்று பெண்கள் தொகுத்து வழங்குவது இதுவே முதன்முறை.
இந்த நிலையில், வெஸ்ட் சைடு ஸ்டோரி திரைப்படத்தில் நடித்த அரியானா டிபோஸ் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது வென்றார்.
டெனிஸ் வில்லெனு இயக்கிய டியூன் படத்துக்கு சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி ஆகிய 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
டியூன் படத்துக்கு 2 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த இசைக்கான ஆஸ்கர் விருதை டியூன் படத்திற்காக 5 இசையமைப்பாளர்கள் பெற்றனர்.
சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதை ‘தி குயின் ஆப் பேஸ்கட்பால்’ திரைப்படம் வென்றது.
சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார் வில் ஸ்மித்.
கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக இந்த விருதை அவர் வென்றார். சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை “தி அய்ஸ் ஆப் டேமி ஃபாய்“ திரைப்படத்திற்காக “ஜெஸ்ஸிகா சாஸ்டெய்ன்“ வென்றார்.
லைவ் ஆக்ஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை 'தி லாங் குட்பை' வென்றது. சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை 'டிரைவ் மை கார்' வென்றது.
சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை 'பெல்ஃபாஸ்ட்' படத்திற்காக 'கென்னித் பிரனாக்' வென்றார்.
சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை 'சம்மர் ஆஃப் சோல்' வென்றது இந்தியாவின் 'ரைட்டிங் வித் ஃபயர்' சிறந்த ஆவணப்படத்திற்கான பிரிவில் ஆஸ்கர் வாய்ப்பை இழந்தது.
ஆர்ஆர்ஆர் பாக்ஸ் ஆபிஸ் என்ன தெரியுமா?
ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் மிகப் பெரிய பொருட்செலவில் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ஆர்ஆர்ஆர்.
இந்தப் படத்தில் அலியா பட், அஜய் தேவ்கன் ஆகிய பாலிவுட் நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
மரகதமணி இசை அமைத்துள்ளார். சுதந்திரப் போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது இந்தப் படம்.
முதல் வாரத்தில் மட்டும் இந்தி பதிப்பு ரூ.73 கோடி அள்ளியுள்ளது. குஜராத், பிகார், ஒடிஸா ஆகிய மாநிலங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
சனிக்கிழமை மட்டும் இந்தி பதிப்பில் இந்தப் படம் ரூ.23.75 கோடி வசூல் சாதனை செய்தது. வெளிநாடுகளில் ரூ.50 கோடி வசூல் சாதனை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் இதுவரை ரூ.156 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது ஆர்ஆர்ஆர். இது இன்னும் அதிகரிக்கக் கூடும்.
யூ-டியூப் டிரெண்டில் நம்பர் 1 இடம் பிடித்த டிரைலர்
கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'யாஷ்' ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது. அதன்பின் கே.ஜி.எப் 2 படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
'கே.ஜி.எப்-2' திரைப்படத்தின் டிரைலர் மார்ச் 27ஆம் தேதி மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி சரியாக 6.40 மணிக்கு படத்தின் டிரைலர் இன்று வெளியானது. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படத்தின் டிரைலரை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.
மீண்டும் படம் இயக்கப் போகும் தனுஷ்
நடிகர் தனுஷ் பல படங்களில் நடித்து நல்ல நடிகர் என்ற முத்திரையைப் பதித்தார். பாடல் எழுதுவது, நடனம், தயாரிப்பு என அனைத்து துறைகளிலும் சிறந்த விளங்குகிறார்.
இவர் பவர் பாண்டி என்ற படத்தை இயக்கினார். காதல் கதையான இதில் ராஜ்கிரண், ரேவதி ஆகியோர் நடித்தனர். இந்தப் படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தேர்ந்த இயக்குநராகவும் தனுஷ் அறியப்பட்டார்.
‘அப்பாவுடன் சேர ஆசை… ரஜினி அங்கிள் முயற்சி எடுத்தார்’ வனிதா பர்சனல்
இந்நிலையில், தனுஷ் மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை நிகழ்ச்சியொன்றில் ரோபோ சங்கர் தெரிவித்தார்.
தனுஷ் கதையின் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் ரோபோ சங்கரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.