தர்ம பிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா?

வீட்டுக்கு ஒருநாள் பிச்சை கேட்டு வந்த பிச்சைக்காரருக்கு தனது வித்தியாசமான சமையலை போட்டு அசத்தியவன்

வீட்டுக்கு ஒருநாள் பிச்சை கேட்டு வந்த பிச்சைக்காரருக்கு தனது வித்தியாசமான சமையலை போட்டு அசத்தியவன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
pandavar illam serial sun tv

pandavar illam serial sun tv

sun tv serial: சன் டிவியின் பாண்டவர் இல்லம் சீரியல் கோவிட் தோற்று லாக்டவுன் நேரமாதலால் மறு ஒளிபரப்பாகி வருது. பாண்டவர் என்று சொல்வதற்கு ஏற்ப தாத்தா ஐந்து பேரன்களை பெண் வாசனை படாமல் வளர்க்கிறார். இரண்டாவது பேரன் நல்ல சுந்தரம்தான் வீட்டில் எல்லாருக்கும் நளபாகம் சமைத்து போடும் நல்லான். புளியங்கொட்டை பாயசம்..இலந்தை கொட்டை பகோடா...பணம் பழம் பொரியல் என்று அசத்தி வருபவன்.

Advertisment

வீட்டுக்கு ஒருநாள் பிச்சை கேட்டு வந்த பிச்சைக்காரருக்கு தனது வித்தியாசமான சமையலை போட்டு அசத்தியவன் இந்த நல்லான். தெரியாத்தனமாக பிச்சைக்காரர் குன்னு சொல்லிவிட, இன்னும் இநல்லாருக்ன்னும் என்று போட்டு திணற அடித்த கதையும், பிச்சைக்காரர் பொறுக்க முடியாமல் தலை தெறிக்க ஓடிய கதையும் ரொம்ப சுவாரசியம்.

பெண் சகவாசம் இல்லாமல் இருந்த வீட்டில் குட்டி சுந்தரம் கயலை கல்யாணம் செய்துக்கொண்டு வந்ததில் நல்லானுக்கு விருப்பம் இல்லைதான். இருந்தாலும், சமையலில் தன்னை அடிச்சுக்க முடியாது..என் சமையலைத்தான் தாத்தா விரும்புவார் என்று அதீத நம்பிக்கையில் இருப்பவன்.

Advertisment
Advertisements

திடீர்னு வீட்டில் சண்டை...நல்லானுக்கு யாரும் ஒரு சொல் சொல்லிவிட்டால் பொறுக்காது. வீட்டை விட்டு கோச்சுக்கிட்டு வந்தவனுக்கு எங்கே போவதுன்னு தெரியலை. குழந்தை மாதிரி அழுதுகிட்டு கோயிலில் உட்கார்ந்து இருக்கான். அப்போதுதான் இவன் சாப்பாடு போட்டு திணற அடித்த பிச்சைக்காரர் வந்து தர்ம பிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களான்னு கேட்கறார் .

பசிக்குதுன்னு நல்லான் சொல்ல, தோசை வாங்கிட்டு வந்து தருகிறார் பிச்சைக்காரர். தோசையயை சாப்பிட்ட நல்லான், ஐயா இது என்னன்னு கேட்கிறான். தோசைக்கு சாம்பார் என்று பிச்சைக்காரர் சொல்ல, இது சாம்பரா? இப்படி ஒரு சாம்பாரை நான் பார்த்ததே இல்லையே என்று அருகம்புல் சாம்பார் வைக்கும் நல்லான் இப்படி கேட்டதில் ஆச்சரியப்பட்டு கண்ணீர் வடிக்கிறார் பிச்சைக்காரர்.

மகளா? மருமகனா? வனிதா பிரச்சனையில் மொத்த குடும்பமும் ஆகாஷ் பக்கம் தான்!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Sun Tv

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: