Pandian Stores: வியாழக்கிழமை என்றாலே நினைவுகள் பொதித்த படங்களை பகிர்வதற்கான நாள் என்பது தான் சமூக ஊடக கலாச்சாரம். ஆமாம், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்கள், ஒவ்வொரு வியாழக்கிழமையும் ‘த்ரோபேக் தர்ஸ்டே’ எனும் சொல்லுக்கேற்ப, தங்கள் நினைவு நிறைந்த தருணங்களை பகிர்ந்து வருகிறார்கள். இப்போது, பிரபல தொலைக்காட்சி நடிகை தனது குழந்தைப் பருவ த்ரோபேக் படத்தைப் பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
’சீரியல்ல மட்டும் இல்ல, நெஜத்துலயும் பாசக்காரி’ – ’மகராசி’ பாரதி
நடிகை சுஜிதா தனுஷ் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார். ஹரிச்சந்தனம் என்ற சீரியலில் "உன்னிமயா" என்ற பாத்திரத்தில் நடித்ததன் மூலம், கேரளாவில் அவர் மிகவும் பிரபலமானார். விக்ரமின் ’தாண்டவம்’, சாய் பல்லவியின் ’தியா’ போன்ற பல படங்களிலும் அவர் துணை வேடங்களில் நடித்துள்ளார்.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரது 'தனம்' என்ற கதாபாத்திரம் பார்வையாளர்களால் மிகவும் விரும்பப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சிரஞ்சீவி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சுஜிதா. "என் வாழ்க்கையின் மறக்கமுடியாத திரைப்படங்களில் ஒன்று. (பயமுறுத்தும் வில்லனான பாபு ஆண்டனி எனக்குப் பின்னால் இருப்பதைப் பாருங்கள்) என் அம்மா மற்றும் சகோதரியுடன் போஸ் கொடுத்துருக்கிறேன்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லாக் டவுன் நீடிக்குமா? – நேரலையில் உங்கள் கேள்விகளுக்கு இன்று பதில் அளிக்கிறார் ஹெச்.ராஜா
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.