Magarasi Divya Sridhar: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’மகராசி’ சீரியலில் கதாநாயகி பாரதியாக நடிப்பவர் திவ்யா ஸ்ரீதர். இந்த சீரியலை முதலில் ’சுறா’, ’என் புருஷன் குழந்தை மாதிரி’ ஆகியப் படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் இயக்கியிருந்தார். தற்போது, என்.சுந்தரேஸ்வரன் இயக்கி வருகிறார்.
’பக்கா டிரெடிஷனல்’ தன்ஷிகா, ’ஃப்ளவர் கேர்ள்’ நந்திதா: படத்தொகுப்பு
பெங்களூரில் பிறந்து வளர்ந்த திவ்யா, ’பல்லக்கி’ எனும் கன்னட படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். இருப்பினும் கன்னடத்தில் அவர் நடித்த அக்ஷதீபா சீரியலில், தீபா என்னும் கேரக்டர் அவருக்கு பெரும் புகழை சேர்த்தது. இதனைத் தொடர்ந்து, ’கேளடி கண்மணி’ எனும் சீரியல் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் திவ்யா. தற்போது மகராசி சீரியலில், முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பள்ளிப் படிப்பை பெங்களூரில் முடித்த திவ்யா, 17 வயதிலேயே நடிப்பை தொடங்கினார். சில கன்னடப் படங்களில் நடித்த பிறகு, சீரியல் உலகத்திற்கு என்ட்ரி கொடுத்தார்.
மார்டன் மகராசி
கன்னடத்தில் ஒரே நேரத்தில் இரண்டு மூன்று சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார் திவ்யா. பின்னர் ஒரே நேரத்தில் ஒரு சீரியலில் நடிப்பது தான் சரியாக இருக்கும் என்பதை உணர்ந்து, தற்போது மகராசி சீரியலில் மட்டும் நடித்து வருகிறார். காரணம் ஒரே நேரத்தில் பல சீரியல்களில் நடிக்கும்போது ரசிகர்கள் குழம்புவதற்கு வாய்ப்பு அதிகம். அதை தவிர்க்கவே இப்படியான ஒன்றை பின்பற்றுவதாக தெரிவிக்கிறார். திவ்யாவின் அப்பா, அம்மா, கணவர், குழந்தை என அனைவரும் பெங்களூரில் வசிக்கிறார்களாம். மாதத்தில் 15 நாட்கள் பெங்களூரில் குடும்பத்தினருடன், மற்ற 15 நாட்கள் சென்னையில் சூட்டிங் என காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு ஓடுகிறார் திவ்யா.
வீட்டில் இருக்கும்போது திவ்யாவையும் அவரது குழந்தையையும் திவ்யாவின் அம்மா பார்த்துக் கொள்கிறாராம். சீரியல் நடிகைகள் டிவியே பார்க்க மாட்டார்கள். ஆனால் நானோ ஓய்வு நேரத்தில், நிறைய சீரியல் பார்ப்பேன், என்கிறார். ஒவ்வொரு தொடரின் கதையும் எப்படி நகர்கிறது, நடிகைகளின் மேக்கப், உடைகள் எப்படி இருக்கிறது, என்பதை தெரிந்து கொள்வதில் எப்போதும் கவனம் செலுத்தி வருகிறாராம். சென்னை, பெங்களூரு என மாற்றி மாற்றி பயணித்துக் கொண்டிருக்கும் திவ்யாவுக்கு, ஓய்வு நேரத்தில் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது தான் முதன்மையான ஒன்றாம்.
இந்தியாவில் கொரோனா பரவல் வேகம்: மாநிலம் வாரியாக நிலைமை எப்படி?
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”