Tamil Serial News: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் கூட்டுக்குடும்ப விரும்பிகளை பெரிதும் ஈர்த்துள்ளது. மூர்த்தி, ஜீவா, கதிர், கண்ணன் என நான்கு சகோதரர்களைப் பற்றிய கதை தான் இது. தனது 3 தம்பிகளையும், உடல்நிலை சரியில்லாத அம்மாவையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால், குழந்தை பெற்றுக் கொள்ள வேணாம் என திருமணமான ஆரம்பத்திலேயே தனத்திடம் சொல்லி விடுகிறார் மூர்த்தி. இதை தனமும் ஏற்றுக் கொள்கிறாள்.
படிச்சது எம்.பி.ஏ, பண்றது எல்லாம் வில்லத்தனம் – ’ரோஜா’ அனு
ஆனால் அவளது அம்மாவுக்கும், அண்ணனுக்கும் தனத்துக்கு குழந்தை இல்லை என்பதும், அது மூர்த்தியால் தான் என்பதும் பெரும் வருத்தத்தை தருகிறது. இளையவன் ஜீவாவின் மனைவி மீனாவுக்கு குழந்தை பிறந்து, மொத்த குடும்பமுமே மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். நேர்த்திக் கடனை நிறைவேற்ற கோயிலுக்கு சென்ற இடத்தில் அனைவர் முன்பும், உண்மையை உடைக்கிறார் தனத்தின் அம்மா.
இதனால் மூர்த்தியின் மொத்தக் குடும்பமும் அதிர்ந்து போகிறது. குறிப்பாக மூர்த்தியின் அம்மா, தனத்தின் மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார். திருமணமாகி வந்த நாளில் இருந்து அவரை தனம் தான் பார்த்துக் கொள்கிறாள். ஆனால் அவள் மீது கோபத்தில் இருக்கும் லட்சுமி, மூன்றாவது மருமகள் முல்லையை அழைக்கிறார். ’என்னா அத்தை’ என ஓடி வரும் தனத்திடம், ‘நீ என்ன தொடாத’ என்கிறார் லட்சுமி. அவர் அழைத்தது முல்லைக்கும் கேட்காமல் ரொம்ப நேரம் கழித்து வருகிறாள்.
அதற்கு முல்லையிடம் கோபப்படுகிறார் லட்சுமி. ‘அம்மாவுக்கு என்ன வேணும்ன்னு, அண்ணிக்கு தான் தெரியும்’ என்கிறான் கண்ணன். ‘அக்காவுக்கு ஆதரவா இருக்க வேண்டிய இந்த நேரத்துல அவங்க மேல கோபப்படுறது ரொம்ப தப்பு அத்தை’ என்கிறாள் முல்லை. ‘நீங்க யாரும் என்ன பாத்துக்க வேணாம்’ என உக்கிரமாகிறார் லட்சுமி.
பெரம்பலூரில் கிடைத்தது டைனோசர் முட்டைகளா? உண்மை இது தான்
மூர்த்தி, ஜீவா, கதிர் மூன்று பேரும் வந்த பின்னரும் இந்த பிரச்னை தொடர்கிறது. ’இதுக்கு இன்னைக்கு ஒரு முடிவு கட்டாம விடப் போறது இல்ல’ என தனமும் களத்தில் இறங்குகிறார். ’எனக்கு குழந்தை இல்லன்னு நா ஒருநாள் கூட வருத்தப்பட்டது இல்ல. ஏன்னா எனக்கு நீங்க 3 பேருமே குழந்தைங்க தான். நான் தான உங்கள வளத்தேன். எனக்கு குழந்தை இல்லன்னு நாலு பேர் என்ன காயப்படுத்தும் போதும், விசேசங்கள்ல என்ன விலக்கி வைக்கும் போதும் எவ்வளவு வலிக்குமோ, அதே மாதிரி இருக்கு, இப்போ நீங்க எல்லாரும் கேக்குறதும், டாக்டர பாக்க சொல்றதும். இனிமே இந்த குழந்தை விஷயத்தைப் பத்தியோ, அதுக்கு மாமா தான் காரணம்னோ யாராச்சும் சொன்னீங்கன்னா அப்புறம் சத்தியமா, நா இந்த வீட்ட விட்டு போய்டுவேன்’ என அனைவரையும் ஆஃப் பண்ணுகிறார் தனம். அடுத்து என்ன நடக்கும்? இனி வரும் எபிசோட்களில் பார்ப்போம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”