தன் பிறந்தநாளுக்காக, என்ன பரிசு வாங்கலாம் என கடையில் இருந்த அனைவரிடமும் கதிர் ஐடியா கேட்டதாக, கண்ணன் மூலம் தெரிந்துக் கொள்கிறாள் முல்லை. முதல் நாள் மகளை வருத்தத்துடன் விட்டு விட்டுப் போனோமே, இப்போது எப்படி இருக்கிறாள் என்பதைப் பார்க்க மூர்த்தியின் வீட்டிற்கு விரைகிறார் முல்லையின் அப்பா. அவளுக்கும் கதிருக்கும் பெரிதாக எந்த பிரச்னையும் இல்லை என்றும், சாதாரண விஷயங்களை பேசி தீர்த்துக் கொள்ளாமல் விட்டதன் விளைவு தான் இது, என தனம் முல்லையின் அப்பாவிடம் கூறுகிறாள்.
‘நேத்து நைட் அவர் லேட்டா தான் பா வந்தாரு, அவருக்கு என் பொறந்தநாளுன்னு தெரியாதுல்ல’ என்கிறாள். ‘அவர் எப்படி இங்க வர முடியும். அவர் தான் அங்க வந்திருக்காரே’ என்று முல்லையின் அப்பா சொல்ல, சொல்ல அவள் முகம் மலர்கிறது. ’வரும்போது துணிப்பைல போட்டு, கிஃப்ட் மாதிரி அட்டைப்பெட்டி ஒண்ணு கொண்டு வந்தாராம்’ என்பதையும் முல்லையிடம் தெரிவிக்கிறார்.
அடடே! நம்ம மேல இவ்ளோ பாசமா இருக்காறா? இவ்ளோ நாளா இது தெரியாம போச்சேன்னு மனதுக்குள் நினைத்துக் கொள்கிறாள் முல்லை. தவிர, கண்ணனிடம் அவள் ஃபோன் நம்பரை மனப்பாடமாக கதிர் கூறியதும் கூட பெரிய ஆச்சர்யம். இதைத் தொடர்ந்து, ‘ஏங்க என் நம்பர் எப்படிங்க உங்களுக்குத் தெரியும்?’ என கதிரிடம் கேட்கிறாள் முல்லை. ’நீ இல்லாதப்போ ஃபோனையே தான பாத்துக்கிட்டு இருந்தேன்’ என்கிறான் கதிர்.
அப்புறம் என்ன சின்ன பிரிவு அதிக புரிதலைக் கொடுக்கும் என்ற வகையில், ஒருவர் மீது ஒருவர் இத்தனை ஆழமாக அன்பு வைத்திருப்பதை இருவரும் புரிந்துக் கொள்கிறார்கள்.