Tamil Serial News: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லையாக நடித்து வரும் சித்ராவின் கதாபாத்திரத்தைப் பார்க்கும் போது ரசிகர்களின் கண்கள் கலங்குகிறது. இப்போது சீரியலில் அவரது கதாபாத்திரம் உயிர்ப்புடன் இருக்கிறது. ஆனால் இது எத்தனை நாளைக்கு எனத் தெரியவில்லை.
அம்மாவும், கணவரும் கொடுத்த மன அழுத்தமே சித்ரா தற்கொலைக்கு காரணம் – காவல்துறை
4 அண்ணன் தம்பிகளைப் பற்றிய கதை தான் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல். மூர்த்தி - தனம், ஜீவா - மீனா, கதிர் - முல்லை என மூன்று ஜோடிகள். கடைக்குட்டி கண்ணன் இவர்களுக்கு செல்லத் தம்பி. தம்பிகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக குழந்தை வேண்டாம் என தனத்திடம் மூர்த்தி சொல்ல, அதற்கு அவளும் ஒப்புக் கொள்கிறாள். இளையவன் ஜீவாவுக்கு மீனாவுடன் திருமணமாகி தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு தனம் கர்ப்பமாகியிருக்கிறாள். ஆனால் வீட்டில் பிரச்னையாக இருக்கும் இந்த நேரத்தில் இதைப் பற்றி எப்படி சொல்வது என்ற தயக்கத்திலேயே இருக்கிறாள் தனம். இருப்பினும் கோயிலில் வைத்து இதை மூர்த்தியிடம் சொல்வதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்நிலையில், நேற்றைய எபிசோடில், திருமணம் ஆகி ஒரு வருடம் கடந்து விட்டதால் அக்கம் பக்கத்தினர் விசேஷம் இல்லையா என்று கேள்வி கேட்பதாக தனது ஆதங்கத்தை கணவரிடம் சொல்கிறாள் முல்லை. ஆனால் கதிர் இன்னும் சில ஆண்டுகள் போகட்டும் என்று சில காரணங்களை முன் வைக்கிறான். தான் இன்னும் சிறந்த மனிதனாக ஆன பின் தான் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விடாபிடியாய் பேசுகிறான்.
2020-ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்தின் சிறப்புகள்
முல்லை பொறுமையாக தனது தரப்பு நியாயத்தை விளக்குகிறாள். சொந்தக்காரர்கள் விசேஷம் உண்டா என கேட்கிறார்கள். இப்படியே சென்றால் ஊரே ஒரு மாதிரி பேசும் என்று சொல்கிறாள் முல்லை. முன்பெல்லாம் கதிர்-முல்லையின் காட்சிகள் என்றாலே ரசிகர்களுக்கு ஒரு வித உற்சாகம் பற்றிக் கொள்ளும். ஆனால் கடந்த 2 தினங்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையைப் பார்ப்பவர்களின் மனம் கனத்துப் போகிறது. இன்னும் எத்தனை நாளைக்கு அந்த முகம் சீரியலில் வரும் எனத் தெரியவில்லை.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”