Tamil Serial News: சீரியல் ரசிகர்களை பெரிதும் ஈர்த்திருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். மூர்த்தியின் மூத்த தம்பி ஜீவாவுக்கு தனது மாமா மகள் முல்லையுடன் திருமணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால் ஜீவாவோ முதலாளி பெண் மீனாவை காதலிக்கிறான். இதனால் அவனது தம்பி கதிரை, திருமணம் செய்துக் கொள்கிறாள் முல்லை. முதலில் இருவருக்கும் பிடிக்காமல் இருந்தாலும், போகப் போக புரிதல் உண்டாகிறது.
மது குடித்தார்… காணாமல் போனார்: பீட்டர் பால் பிரிவு குறித்து வனிதா 45 நிமிடம் உருக்கமான வீடியோ
தற்போது மீனாவுக்கும் குழந்தை பிறந்து விட்டது. அவளுக்கு நல்லபடியாக குழந்தை பிறந்தால் பொங்கல் வைத்து வழிபட வேண்டும் என்ற வேண்டுதலை நிறைவேற்ற குடும்பத்தோடு கோவிலுக்கு செல்கின்றனர். அங்கே வந்த தனத்தின் அம்மா காமாட்சி கோபத்தோடும், மன வருத்தத்தோடும், மகளுக்கு குழந்தை பிறக்கவில்லை என்பதற்கான காரணத்தை அனைவர் முன்பும் உடைக்கிறார்.
”உங்கள் மகன் எடுத்த முடிவினால் தான் என் மகளின் வாழ்க்கை சீரழிந்துவிட்டது. அவளுக்கு குழந்தை இல்லாததற்கு காரணம் உங்கள் மகன் மூர்த்தி தான்” என உண்மையை லட்சுமியிடம் கூறுகிறார் காமாட்சி.
இதைத் தெரிந்துக் கொண்ட மூர்த்தியின் தம்பிகள், தங்களால் தான் இந்த நிலைமை என்ற குற்ற உணர்வில் இருக்கிறார்கள். ஜீவா இந்த விஷயத்தை மீனாவிடம் கூற, தற்போது அவரும் வருத்தத்தில் இருக்கிறார்.
ரைசாவுக்கு ஒரு சட்டம் ரம்யாவுக்கு ஒரு சட்டமா? இதெல்லாம் சரியில்ல பிக் பாஸ்
நடந்ததை நினைத்து வருத்தப்பட்ட மூர்த்தி மது குடித்து விட்டு, தனது சோகத்தை மாமாவிடம் வெளிப்படுத்துகிறார். குற்ற உணர்ச்சியில் தனத்திடம் மன்னிப்பு கேட்கிறார் மூர்த்தி. குருவிக்கூடு போல இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம், குழந்தை பிரச்னையால் கலைந்திருக்கிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”