Tamil Serial News: ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் கூட்டுக்குடும்ப விரும்பிகளை பெரிதும் ஈர்த்துள்ளது. மூர்த்தி, ஜீவா, கதிர், கண்ணன் என நான்கு சகோதரர்களைப் பற்றிய கதை தான் இது. தனது 3 தம்பிகளையும், உடல்நிலை சரியில்லாத அம்மாவையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால், குழந்தை பெற்றுக் கொள்ள வேணாம் என திருமணமான ஆரம்பத்திலேயே தனத்திடம் சொல்லி விடுகிறார் மூர்த்தி. இதை தனமும் ஏற்றுக் கொள்கிறாள்.
’ஆபிஸ்’ மதுமிளா, இப்போ ஆறு மாச குழந்தைக்கு அம்மா!
இந்த விஷயத்தை அனைவர் முன்பும் தனத்தின் அம்மா காமாட்சி சொல்ல, எல்லோரும் அதிர்ந்து போகிறார்கள். இனியும் குழந்தை பெற்றெடுக்க ஆசையில்லை என தனம் தனது அம்மாவிடம் கூற, நம் குடும்பத்தின் உறவு இத்துடன் முறிந்துவிட்டது என காமாட்சி ஆக்ரோஷத்துடன் கூறிவிட்டு செல்கிறார். இது ஒருபுறமிருக்க, இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ரதி உருவில் இன்னொரு பிரச்னை.
கதிரும் செந்திலும் இணைந்து மகேஷுக்கும், ரதிக்கும் செய்து வைத்த திருமணத்தால் பிரச்சனை ஏற்படுகிறது. அதனால் ரதியை கதிர் வீட்டில் 2 நாட்கள் தங்க வைத்திருக்க நண்பர்கள் கேட்கிறார்கள். கதிரும் அவரது வீட்டில் சமாளித்து ரதியை தங்க வைக்கிறார். செந்திலின் தங்கை என சொன்னாலும், இதை முல்லை நம்பவில்லை. இதனால் நேரடியாக கேட்கலாமா, வேண்டாமா என குழப்பத்தில் இருக்கிறாள்.
மறுபுறம் மீனாவின் தந்தை ஜனார்தனும், ஜீவாவிற்கு சூப்பர் மார்க்கெட் வைத்துக் கொடுத்து, அவர்களை குடும்பத்தில் இருந்து தனியாக பிரித்துவிட வேண்டும் என திட்டம் தீட்டுகிறார்.
தனத்தின் அண்ணி கஸ்தூரி மீண்டும் வீட்டிற்கு வந்து, அவரின் நகை, துணிமணி என அவரது பொருட்களை கொடுத்து விட்டு, ”இத்துடன் நமக்குள் இருந்த உறவு முறிந்துவிட்டது. உனக்கும் உனது பிறந்த வீட்டிற்கும் எந்த ஒட்டும் இல்லை, உறவும் இல்லை, உனக்கென்று இருக்கும் சொத்துக்களை கொடுத்து விடுகிறோம்” என கூறிச் செல்கிறார்.
மூர்த்தி ஜெகாவை சந்திக்க வரும்போது, உச்சக்கட்ட கோபத்தில் இருந்த ஜெகாவோ, மூர்த்தியை கண்டபடி திட்டிவிட்டு, ’உன் சுயநலத்திற்காக என் தங்கச்சி வாழ்க்கைய சீரழிச்சுட்டியே.. உன் தம்பிங்க உன்ன விட்டு பிரிஞ்சு, நீ யாரும் இல்லாம தன்னந்தனியா நிப்ப’ என சாபம் விடுகிறார்.
இந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்… சென்னை வானிலை அறிக்கை!
பிரச்னை இல்லாமல் போய்க்கொண்டிருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் இப்படி அடுத்தடுத்து பல பிரச்னைகளில் இருக்கிறது. எப்போது சரியாகும்? பொறுத்திருந்து பார்ப்போம்...
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”