Pandian Stores Serial : சும்மா நிக்குதே.. இப்படி ஒரு விஷயம் நம்ம வீட்டில் இருக்கறதை நான் கவனிக்கவே இல்லையேன்னு, வீட்டுக்கு வெளியில் ஒரு ஓரமா நின்னுகிட்டு இருந்த புல்லட்டை எடுத்துக்கிட்டு கண்ணன் கிளம்பினான் சவாரி. பார்த்தா எங்கியோ மோதிட்டு வந்து நிக்கறான். விடுவாளா ஜீவா பொண்டாட்டி மீனா. ஒரே சத்தம்.. வந்து பார்த்தா கண்ணனிடம் காச் மூச்னு கத்துக்கிட்டு நிக்கறா.
யோகாசனத்தில் முத்தம்: ரகுல் ப்ரீத் சிங்கின் வைரல் வீடியோ
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தான் இந்த அட்டகாசம். வீடே கூடி நிற்க மீனா ஓய்ந்தபாடில்லை. லேசா கீறல் இதுக்கா இப்படி சத்தம்போடறீங்க என்று முல்லை கேட்கிறாள். ஏன் சொல்ல மாட்டீங்க? உங்க அப்பா இப்படி ஒரு பைக்கை வாங்கிக் குடுத்து, அதை இவன் டேமேஜ் ஆக்கிட்டு வந்தா அப்போ உங்களுக்குத் தெரியும்னு மீனா வெடுக் வெடுக்கென்று பேசறா.
தை பூசம் அதுவுமா நான்வெஜ் சாப்பிடக் கூடாதுன்னு அண்ணி சொன்னாங்க. நாம் சாப்பிட்டுட்டு வந்துட்டோம்... அவங்க குளிச்சுட்டு வாடான்னு சொன்னாங்க அப்பவே குளிச்சுட்டு வீட்டுக்குள்ள இருந்தா இந்த பிரச்சனையே இல்லையேன்னு கண்ணன் நொந்துக்கறான். நொந்து என்ன பயன்.. மீனா வாய் ஓயலையே..அவள் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கா.. ஜீவா இந்தாடா.. இதை வச்சுக்கோன்னு தனம் பணம் குடுக்கறா.
Gypsy Review : காதல், மனித நேயம், சாதி அரசியல் பேசும் ‘ஜிப்ஸி’
எதுக்கு அண்ணின்னு ஜீவா கேட்க, இந்த பணத்தை வச்சு பைக்கை சரி பண்ணிக்கோடா. பத்தலைன்னா கேளு.. இன்னும் மாமாகிட்டே சொல்லி வாங்கித் தரேன்னு சொல்றா தனம். அண்ணி இதெல்லாம் எதுக்கு அண்ணின்னு ஜீவா பொண்டாட்டியை அடக்க முடியாமல் கேட்கிறான். எதிர்பாராத விதமா கண்ணன் கன்னத்துல விழுது பாருங்க ஒரு அறை. தனம் பிள்ளை மாதிரி வளர்த்த கண்ணனை யாரும் எதிர்பார்க்காம அடிச்சுட்டா. பாவம் அவளுக்கு இன்னும் என்னென்ன சோதனைகள் எல்லாம் இனி வரப்போகுதோ...
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"