Pandian Stores on Vijay TV : விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மெகா தொடர், சின்னத்திரையின் ‘ஆனந்தம்’ திரைப்படம் என்றே சொல்லலாம். முழு குடும்பக் கதையான இதில், ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் அன்பும், புரிதலும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் பெருமளவில் ’ஹைலைட்’ செய்யப்படுகிறது.
”வயசுங்கறது வெறும் நம்பர் தான்” – சிம்ரனின் டான்ஸைப் பார்த்தால் புரியும்!
மூர்த்தி – தனம் தம்பதியினர் குழந்தை பெறாமல், ஜீவா, கதிர், கண்ணன், என்ற மூர்த்தியின் தம்பிகளை வளர்க்கிறார்கள். இதில் ஜீவா, மீனாவை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறான். மீனாவின் அப்பா ஜனார்த்தனன், இவர்களை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறார். இப்படியே ஒருவருடம் கழிந்த நிலையில், மீனா கர்ப்பமாகிறாள். மகள் மீது வைத்திருந்த கோபத்தை மறந்து அவளை ஏற்றுக் கொள்கிறார், அப்படியே ஜீவாவையும். அதனால் ஜீவா – மீனா இருவரும் சில நாட்கள் ஜனார்த்தனின் வீட்டில் இருந்து விட்டு, பின்னர் வீடு திரும்புகிறார்கள்.
மாப்பிள்ளைக்காக மோதிரன், செயின், பிரேஸ்லெட் உள்ளிட்டவைகளை வாங்கிப் போட்டு அனுப்புகிறார் ஜனார்த்தனன். இதைப் பார்த்த முல்லைக்கு, நம்ம அப்பாவுக்கும் வசதி வந்ததும், இதெல்லாம் வாங்கித் தர கேட்க வேண்டும் என மனதுக்குள் நினைத்துக் கொள்கிறாள். வந்ததும் வராததுமாக, தனம் கையால் சாப்பிட வேண்டும் என ஆசைப்படுகிறான் ஜீவா. ‘என்ன இருந்தாலும் உங்க கையால சாப்பிடுற மாதிரி வருமா’ என புகழ்கிறான். இது மீனாவுக்கு எரிச்சலை உண்டாக்குகிறது.
தம்பி சந்தோஷமாக இருப்பதைப் பார்த்த மூர்த்தி கடைக்கு செல்கிறார், அப்போது, ஜனார்த்தனன் தன் மருமகனுக்காக விரைவில், மீனா ஸ்டோர்ஸோ, ஜீவா ஸ்டோர்ஸோ திறக்கப் போகிறார் என்ற தகவலை அறிந்து அதிர்ச்சியாகிறார். மறுபுறம் மாமனார் போட்ட நகைகளை கழட்டி வைக்க முயல்கிறான் ஜீவா. ‘எங்கப்பா போட்ட நகைகளை கழட்டக் கூடாது’ என கோபமாகிறாள் மீனா. இருவருக்கும் வாக்கு வாதம் முற்றுகிறது. இறுதியில், இன்னைக்கு ஒருநாளைக்கு மட்டும் என நகைகளைப் போட்டுக் கொள்ள சம்மதிக்கிறான்.
தமிழக போலிஸ் தொடங்கிய வாட்ஸ்அப் குரூப் : இணைவது எப்படி?
ஜீவா போனதும், மீனாவை அழைத்து கர்ப்பமாக இருக்கும் போது, இப்படி சத்தமாக பேசக் கூடாது என அறிவுரை கூறுகிறார்கள் தனமும், முல்லையும். மாமனார் வாங்கிக் கொடுத்த புல்லட்டில் கடைக்கு வருகிறான் ஜீவா. தனிக்கடையை வைத்துக் கொடுத்து, ஜீவாவை நம்மிடமிருந்து பிரித்து விடுவார்களோ என்ற யோசனையில் ஆழ்ந்திருக்கிறார் மூர்த்தி. பாண்டியன் ஸ்டோர்ஸ் இரண்டாக பிரியுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”