Advertisment

”வயசுங்கறது வெறும் நம்பர் தான்” - சிம்ரனின் டான்ஸைப் பார்த்தால் புரியும்!

”உங்கள் கவலைகளைப் போக்க நடனமாடுங்கள். அதில் ஒன்றி இருக்கும் போது, இசையுடன் மூழ்கி உடல் தானாக வளைந்துக் கொடுக்கும்”

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Simran Bagga, simran dance video, simran putta bomma tik tok dance video

Simran Bagga

Simran's dance Video : 9’ஸ் கிட்ஸ் அனைவருக்கும் எப்போதுமே ஃபேவரிட் நடிகை என சிம்ரனை சொல்லலாம். குறிப்பாக இவரது நடனத்திற்காகவே இவருக்கு விசிறியானவர்களின் எண்ணிக்கை கணக்கிட முடியாதது. காதல், செண்டிமெண்ட், நகைச்சுவை என எல்லாவற்றிலும் தனது முழுமையான நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாஸ் வாங்குவதில் வல்லவர்.

Advertisment

”நீங்களும், ஷங்கரும் தானே படப்பிடிப்பில் கேப்டன்களாக இருந்தீர்கள்?” – கமலுக்கு லைகா பதில்

திருமணம் ஆனதும், மற்ற நடிகைகளைப் போலவே நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். இதற்கிடையே கடந்தாண்டு பொங்கலுக்கு வெளியான ‘பேட்ட’ படத்தில் நடித்திருந்தார். இத்தனை ஆண்டுகள் கழித்து ரஜினியுடன், சிம்ரன் நடித்ததைப் பார்த்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சி இரட்டிப்பானது. இருப்பினும் அவரது நடனத்தைப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம், சிம்ரன் ரசிகர்களிடம் இருந்தது.

வாடகையும் தரவில்லை… ஏன் என்று கேட்ட உரிமையாளர் மீதும் தாக்குதல்… பியூஷ் மனுஷ் கைது

இந்நிலையில் தற்போது தான் நடனமாடும் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சிம்ரன். ”உங்கள் கவலைகளைப் போக்க நடனமாடுங்கள். அதில் ஒன்றி இருக்கும் போது, இசையுடன் மூழ்கி உடல் தானாக வளைந்துக் கொடுக்கும்” என்ற கேப்ஷனுடன் அந்த வீடியோவை வெளியிட்டிருந்தார் சிம்ரன். இதனைப் பார்த்த ரசிகர்கள், “நீங்கள் தான் உண்மையான பெண் சூப்பர் ஸ்டார்” என்றும், ”இத்தனை வருடம் ஆனாலும் அப்படியே இளமையாக இருக்கிறீர்கள்” எனவும், தங்களது அன்பை பொழிந்து வருகிறார்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"  

Simran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment