Pattas in Tamilrockers : தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பட்டாஸ் திரைப்படம், பொங்கல் தினத்தன்று வெளியான நிலையில், அதேநாளில், தமிழ்ராக்கர்ஸ் அந்த படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ள நிகழ்வு படக்குழுவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
Pattas in Tamilrockers : தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பட்டாஸ் திரைப்படம், பொங்கல் தினத்தன்று வெளியான நிலையில், அதேநாளில், தமிழ்ராக்கர்ஸ் அந்த படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ள நிகழ்வு படக்குழுவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
Pattas in Tamilrockers, Patta Movie Leaked in Tamilrockers
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பட்டாஸ் திரைப்படம், பொங்கல் தினத்தன்று வெளியான நிலையில், அதேநாளில், தமிழ்ராக்கர்ஸ் அந்த படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ள நிகழ்வு படக்குழுவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
தமிழ்ராக்கர்ஸிடம் சிக்கி தமிழ் திரையுலகம் படாதபாடு பட்டுவரும் நிலையில், அதில் சமீபத்தில் சிக்கியுள்ளது தனுஷ் நடிப்பிலான பட்டாஸ் படம். சினேகா, நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்த படம், பொங்கல் கொண்டாட்டமாக வெளியானது.
Advertisment
Advertisements
கொடி படத்தை தொடர்ந்து தனுஷ் - இயக்குனர் துரை செந்தில்குமார் இடையேயான கூட்டணி, இந்த படத்தில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. பட்டாஸ் படத்தில், தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
தனுஷ் ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களாலும் பட்டாஸ் படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. படம் குறித்த கலவையான விமர்சனங்களை படம் பார்த்தவர்களும், ரசிகர்களும்,நெட்டிசன்களும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்ராக்கர்ஸ் இணையதளம், பட்டாஸ் படத்தை இணையதளத்தில் வெளியிட்டு படக்குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதற்கு முன்பு வெளியான தர்பார், தன்ஹான்ஜி, சபாக், சரிலேறு நீகெவ்வாரு, ஆலா வைகுந்தபுரம்லோ உள்ளிட்ட படங்களையும் தமிழ்ராக்கர்ஸ் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் தொடர்ந்து தனது டொமைன் உள்ளிட்ட இணையதள கட்டமைப்பை மாற்றிவருவதால், அதன் செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
திரையுலகினரும், தமிழ்ராக்கர்ஸ்சின் செயல்பாடுகளை தடுத்து நிறுத்த அவ்வப்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் பல டொமைன்கள் பிளாக் செய்யப்பட்ட நிலையிலும், புதிது புதிதாக டொமைன்களிலும் வருவதாலும், புராக்ஸி சர்வர்களில் இந்த டொமைன்கள் செயல்படுவதால், அதன் செயல்பாட்டை கண்காணிப்பதையோ, தடுத்துநிறுத்தவோ முடிவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் போரில் தர்பார் படத்துக்கு போட்டியாக பட்டாஸ் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழ்ராக்கர்ஸ் இந்த படத்தையும் வெளியிட்டுள்ள நிகழ்வு, அதன் வசூலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.