Pattas Trailer: நடிகர் தனுஷ் தற்போது ‘பட்டாஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை ’எதிர் நீச்சல்’, ’காக்கிச்சட்டை’, ’கொடி’ ஆகிய படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியிருக்கிறார். அப்பா - மகன் என இருவேடங்களில் ’பட்டாஸ்’ படத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். அவருக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சோடா, சினேகா என 2 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள, இப்படத்திற்கு விவேக் - மெர்வின் இசையமைத்துள்ளனர்.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி தனுஷ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதோடு பட்டாஸ் திரைப்படம் பொங்கல் விடுமுறையையொட்டி வருகிற 16-ந் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் காலை 10.31 மணிக்கு இதன் ட்ரைலர் வெளியானது.
Advertisment
Advertisements
”நமக்கு எது நல்லதுனு நம்ம மண்ணுக்கு தான் தெரியும், நம்ம மண்ணோட ஈரத்த காயாம காப்பாத்தி அடுத்த தலைமுறைக்கு கொண்டுபோய் சேர்க்குறது நம்ம கடமை இல்லையா” என்ற வசனத்துடன் ஆரம்பிக்கும் இந்த ட்ரைலர் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. தற்காப்பு கலை வல்லுனராக அப்பா தனுஷ் நடித்திருக்கிறார், அவருக்கு ஜோடியாக சினேகா இடம்பெற்றுள்ளார். “பேருக்கு பின்னாடி அப்பன் பேர் போட்டுக்கிறது மட்டும் புள்ளைக்கு பெருமை இல்லடா அந்த பேர காப்பாத்துற மாதிரி நடந்துக்கணும்” எனும் வசனம் தனுஷ் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதற்கு முன் துரை செந்தில் குமாரின் ‘கொடி’ திரைப்படத்தில் அண்ணன் - தம்பியாக இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் தனுஷ். இப்போது அப்பா - மகனாக களம் இறங்கியுள்ளார். அசுரன் திரைப்படத்தில் அப்பாவாக நடித்த தனுஷ் ரசிகர்களிடையே பயங்கற ‘அப்ளாஸ்’ வாங்கினார். அந்த மேஜிக் இதிலும் நடக்குமா என, பொறுத்திருந்து பார்ப்போம்.