சென்னை தாம்பரம் – வேளச்சேரி பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக மெட்ரோ ரயில் அல்லது இலகு ரக ரயில் சேவை துவக்கப்பட உள்ளது.
தர்பாருக்கு இசை அமைத்த அனிருத் மீது இப்படி ஒரு நடவடிக்கையா?
சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதம், 45 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில், புறநகர் ரயில் சேவை, பறக்கும் ரயில், மெட்ரோ ரயில் சேவைகள் இருக்கும்நிலையில், புதிதாக இலகுரக ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆற்றிய உரையில், தாம்பரம் – வேளச்சேரி வழித்தடத்தில் அதிக போக்குவரத்து நெரிசலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், ரயில் மூலமான போக்குரவத்தின் மூலமே இந்த விவகாரத்திற்கு தீர்வு காணமுடியும் என்பதால், 15.5 கி.மீ. தொலைவிலான இந்த வழித்தடத்தில் ரயில் சேவையை துவக்குவதற்கான விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்திற்கு மாநில அரசு உத்தரவிட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சென்னை மெட்ரோ நிறுவன உயரதிகாரி கூறியதாவது, வேளச்சேரி – வண்டலூர் வழித்தடத்தி்ல மோனோ ரயில் சேவை துவக்க திட்டம் உள்ள நிலையில், இந்த புதிய ரயில் சேவை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மோனோ ரயில் சேவை, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், சேலையூர் மற்றும் தாம்பரம் பகுதிகளை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. இப்பகுதியில் ரயில் சேவை துவக்கப்பட்டால், இதனை சுற்றியுள்ள பகுதிகள் மிகவேகமாக வளர்ச்சியடையும். மக்களின் பயன்பாடு, அரசின் முதலீடு உள்ளிட்டவைகளை பொறுத்து எந்த வகை ரயில் சேவை இந்த பகுதியில் துவக்குவது என்பது முடிவு செய்யப்படும்.
கத்திப்பாரா – பூந்தமல்லி வழித்தடத்தில் மோனோ ரயில் திட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவித்திருந்த நிலையில், மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் கத்திப்பாரா பகுதி, ஆலந்தூர் பகுதியுடன் இணைக்கப்பட்டு விட்டது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளில், போரூர், எஸ்ஆர்எம்சி மருத்துவமனை, ஐயப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், குமணன்சாவடி மற்றும் கரையான்சாவடி பகுதிகள் இணைக்கப்பட உள்ளன.
முதலில், கத்திப்பாரா – பூந்தமல்லி வழித்தடத்தில் மோனோரயில் சேவையையே அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டது. போரூர் – பூந்தமல்லி பகுதியில் நிலவும் அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாகவே, அங்கு மெட்ரோ ரயில் சேவை துவக்கப்பட்டது.
சென்னை விமானநிலையம் – கிளாம்பாக்கம் இடையிலான 15.3 கி.மீ தொலைவிலான வழித்தடத்திலும் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட உள்ளது. இந்த பகுதியில் புதிதாக மொபசல் பஸ் ஸ்டாண்ட் வர உள்ள நிலையில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாக கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தில், 118.9 கி.மீ தொலைவிற்கு பணிகளை மேற்கொள்ள ரூ.69,180 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 52.01 கி.மீ தொலைவிலான வழித்தடத்தில் பணிகளை மேற்கொள்ள ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து பணம் பெறுவதற்கான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. ஆசிய கட்டமைப்பு முதலீட்டு வங்கி, புதிய மேம்பாட்டு வங்கிகள் உள்ளிட்டவைகளின் நிதியுதவியில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற உள்ளன.
திருவொற்றியூர் – விம்கோ நகர் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு, இந்தாண்டின் பிற்பகுதியில் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.