Petta Audio Launch : என்னை ஒரு குழந்தை போல கார்த்திக் சுப்புராஜ் ரசித்தார் : ரஜினிகாந்த்

Petta Audio launch today : சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் பேட்ட படத்தின் பாடல்கள் இன்று மாலை வெளியாக இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள பேட்ட படத்தின் ஆறு பாடல்கள் மற்றும் தீம் மியூசிக் கொண்ட  ஆடியோ அனத்தும் இன்று மாலை…

By: Updated: December 9, 2018, 09:54:19 PM

Petta Audio launch today : சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் பேட்ட படத்தின் பாடல்கள் இன்று மாலை வெளியாக இருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள பேட்ட படத்தின் ஆறு பாடல்கள் மற்றும் தீம் மியூசிக் கொண்ட  ஆடியோ அனத்தும் இன்று மாலை 6.30 வெளியாகவுள்ளது. இந்த இசை வெளியீடு நிகழ்ச்சியை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடத்த அனைத்து ஏற்பாடுகளை படக்குழுவினர் செய்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், இயக்குநர் சுப்புராஜ், நடிகர் ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் கலாநிதி மற்றும் இசையமைப்பாளர் அனிருத் உட்பட படக் குழுவினர் அனைவரும் கலந்துக் கொள்ள இருக்கின்றனர். இந்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

முன்னதாக சர்கார் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், சர்காரின் இசை வெளியீட்டு விழாவை இதே போல் ஒரு தனியார் கல்லூரியில் நடத்தியது. அதில் பலரும் கலந்துக் கொண்டு பேசினர். இறுதியாக பேசிய விஜய் ஆங்காங்கே அரசியல் நுழைவு ஆசையின் அறிகுறிகளையும் விட்டுச் சென்றார்.

‘உம்னு, கம்னு, ஜம்னு’ விஜய் பேசிய அந்த பன்ச் டயலாக் தல ஃபேன் எழுதியதாம்… யாரு பாருங்க!!!

இந்நிலையில், அதே போன்ற ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சியை தான் பேட்ட படத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளனர். பொதுவாகவே ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தின் அறிவிப்பை வெளியிட்ட நாள் முதலே எல்லா மேடைகளிலும் அரசியல் பன்ச் வைத்து தான் பேசுகிறார்.

இதனால் தமது பிறந்தநாளில் அரசியல் அறிவிப்பு ரஜினி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் இவ்விழாவில் ரஜினியின் பேச்சு பெரும் ஆவலை அவர் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. நேரடியாக இந்த வெளியீடு நிகழ்ச்சியை காண முடியாதவர்கள் சன் டிவியில் காணலாம் என்றும் அறிவித்துள்ளனர்.

Petta Audio launch today : பேட்ட படத்தின் இசை வெளியீடு

9.00 pm : பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேச்சு :

“முதலில் கஜ புயலால் வாழ்வாதாரத்தை இழந்து வாடும் மக்களுக்கு அனுதாபங்கள். அதற்கு என் மூலமாகவோ, ரஜினி மக்கள் மன்றம் சார்பாகவோ, இப்போது சாய் ராம் கல்லூரி உதவி தொகை கொடுத்திருக்கிறார்கள். கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத பேரிழப்பு. அனைவரும் சேர்ந்தால் தான் புயலால் பாதிக்கப்பட்டவர்களை மீட்க முடியும். 

அடுத்ததாக 2.0 படம். இயக்குநர் ஷங்கர் உருவாக்கிய இந்த படம் நிறைய சவாலை சந்தித்தது. இதற்கு முன்னால் இருந்த நிறுவனம் படம் தாமதம் ஆவதால் பணத்தை திரும்ப தருமாறு குண்டு தூக்கி போட்டார்கள். அப்போது இதற்கு பிள்ளையார் சுழி போட்டது கலாநிதி சார் தான். இழப்பு தொகையும் கொடுத்து, சங்கர் – ரஜினி இருக்கிறார்கள் அதனால் எனக்கு நம்பிக்கை இருக்கு. எப்போது ரோபோ 2 பண்ணாலும் சன் பிக்சர்ஸ் பண்ணும் என்று சொன்னார்.

இரண்டு வருடத்திற்கு பிறகு ஒரு கதை கார்த்திக் சுப்புராஜ் சொல்லியிருந்தார். அப்போது அந்த கதையை மீண்டும் சொல்லும்படி கேட்டேன். முதல் தடவையை விட இரண்டாம் முறை பிரமாதமாக சொன்னார். இதே கதையை கலாநிதி சாரிடம் சொல்ல சொன்னேன். கதை ஓகே ஆனது.

படத்தின் ஷூட்டிங் வட நாட்டில் நடந்தது. பிறகு படத்தின் பிற கேரக்டர்கள் செலக்ட் செய்ய வேண்டும். வில்லன் கேடக்டருக்கு விஜய் சேதுபதி ஒகேவா என்று கேட்டார் சுப்புராஜ். நானும் அவர் நடிக்க ஒற்றுக் கொள்வாரா என்று கேட்டேன். மறுநாள் ஒப்புக்கொண்டார் எனக்கு சந்தோஷம். 

விஜய் சேதுபதி படமெல்லாம் பார்த்திருக்கிறேன். நல்ல நடிப்பார் என்பது தெரியும். ஆனால் அவருடன் பழகிய பிறகு தான் தெரியும், அவர் சாதாரண நடிகர் இல்லை மகா நடிகர். ஒவ்வொரு ஷாட்டும் பிரமாதமாக கவனித்து நடிப்பார். நடிப்பு மட்டுமல்ல நிஜத்திலும் நல்ல மனிதர். நல்ல சிந்தனைகள் உடையவர்.

அடுத்ததாக படத்தில் ஒரு ஃப்லேஷ்பேக் கதை வேறு இருக்கிறது. அப்போ அந்த கேரக்டர் யார் என்று யோசிக்கும்போது தான் த்ரிஷா பற்றி கூறினார்கள். எப்படி செட் ஆகுமா என்று யோசித்தபோது, நிச்சயமாக சரியாக இருக்கும் என்று கார்த்தி கூறினார். அதற்கு ஏற்றார் போல் த்ரிஷா ஆர்வத்துடன் நடிக்க தயாராக இருந்தார்.

மற்றொரு கேரக்டர் இருக்கே யார் என்று அதற்கும் உட்கார்ந்து யோசித்தோம். சிம்ரன் என்று சொன்ன உடன் எல்லாருக்கும் ஒகே ஆனது. அருமையான நடிகை. அதே போல் சசிகுமார் நான் இதுவரை சந்தித்த நல்ல மனிதர்களில் ஒருவர்.

அனிருத் சிறு வயதில் இருந்தே இசையில் அதிகம் ஆர்வம் கொண்டிருந்தவர். அடுத்த ஏ.ஆர். ரகுமான் அவர் தான் என்று தனுஷ் சொல்லிட்டே இருப்பார். அந்த அளவுக்கு துள்ளல் கொண்டவர். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஒரு குழந்தையை ரசிப்பது போல எனக்கு மேக் அப் போட்டு நடிக்க வைத்து அழகு பார்த்தார்.

இது அருமையான படம், என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்த கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ரசிகர்கள் அனைவரும் நன்றி.” என பாடல் போலவே மரண மாஸ் பேச்சும் கொடுத்தார்.

8.30 pm : பேட்ட படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மேடையில் பேச்சு. “எனக்கு சினிமா என்றாலே பெரிய இன்ஸ்பிரேஷன் தலைவர் தான். என் படத்தை பார்த்து என்றாவது பாராட்ட மாட்டாரா என்று பல நாள் நினைத்திருக்கிறேன். அப்போது ஒரு நாள் எனக்கு ஒரு போன் வந்தது. பீட்சா படம் வெளியாகி இருந்த நேரம் அது. அந்த படத்தை பார்த்துட்டு என்னை பாராட்டினார்.

பின்பு ஒரு நாள் அவரிடம் கதை சொல்ல காத்திருந்தேன். அந்த தருணமும் நிறைவேறியது. இப்படி தான் பேட்ட படம் நிஜமானது. நான் வேறு எதாவது படம் பண்ணியிருந்தாலும், ஆஸ்கர் விருதே வாங்கியிருந்தாலும் என் வாழ்க்கை நிறைவாக இருந்திருக்காது. இப்போது தான் சந்தோஷமாக இருக்கு.” என்றார்.

8.10 pm : “எல்லாரும் சொன்னது போலவே நானும் சூப்பர் ஸ்டார் ஃபேன். இது ரஜினி சாருக்கு 165 படம். ஆனாலும் அவரிடம் தான் ஒழுக்கம் கற்றுக்கொள்ள வேண்டும். காலை 6 மணிகெல்லாம் ஷூட்டிங் வருவார். இவ்வளவு பெரிய படத்தில் அவருடன் நடிக்க எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி கார்த்திக் சுப்புராஜ்” என்றார்.

8.00 pm : “இந்த படம் எனக்கு ஒரு பரிசு. என் பிறந்தநாளன்று இந்த படத்தின் வாய்ப்பு எனக்கு வந்தது. நான் சின்ன வயதில் இருந்தே சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலுக்கு ரசிகர். இந்த படத்தில் அவருடன் நடித்தது மகிழ்ச்சி.” என சிம்ரன் தெரிவித்தார்.

7.50 pm : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் பேட்ட படத்தின் பாடல்கள் ரிலீஸ்

7.30 pm : “ரஜினி சாருடன் இணைந்து நடிப்பது காணாத கனவு ஒன்று நிறைவேறுவது போல் உள்ளது. ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் முதலில் நான் சந்தித்தது ஒரு குறும்படத்தில் நடிக்கப்பதற்கு தான். இப்போது அவர் சூப்பர் ஸ்டார் இயக்குநர் என்பது பெருமையாக இருக்கு. நாம் இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை மாஸ் என்று சொல்லி பார்த்திருப்போம்… மாஸாக, க்யூட்டா, கெத்தா, ஸ்டைலா அது தான் பேட்ட” என்று பேசினார் விஜய் சேதுபதி.

7.30 pm : பேட்ட இசை நிகழ்ச்சிக்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வருகை

7.15 AM : நிகழ்ச்சியில் பிரபலங்களின் பேச்சுக்கு இடையே ரஜினிகாந்த் மற்றும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு படங்களில் இருந்து பாடல்களுக்கு நடன நிகழ்வுகள் நடைபெறுகிறது.

7.00 pm : பாபி சிம்ஹாவை தொடர்ந்து இயக்குநர் – நடிகர் சசிகுமார் மேடையில் பேசினார். அப்போது, “சூப்பர் ஸ்டார் படங்கள் எல்லாமே முதல் நாள் முதல் ஷோவில் பார்ப்பேன். ஆனால் இப்போது அவருடன் இணைந்து நடித்திருக்கிறேன். ரொம்ப நல்ல மனிதர். நட்பாகவும் சாந்தமாகவும் பழகக் கூடியவர். எளிமையான மனிதர். ” எனக் கூறினார்.

6.45 pm : நிகழ்ச்சியின் தொடக்கத்தில் நடிகர் பாபி சிம்ஹா பேசினார். ரஜினிகாந்துடன் இணைந்து நடித்ததன் அனுபவம் குறித்து தொகுப்பாளர் கேட்ட கேள்வி, “என் வாழ்வில் அவரை பார்ப்பேன் என்று நினைக்கவே இல்லை. ஆனால் அவருடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். இதை விட வேறு என்ன வேண்டும். எனக்கு அவர் கடவுள் போல்.” என்றார்.

6.30 pm : பேட்ட இசை வெளியீடு நிகழ்ச்சி பொதுமக்கள் அனைவரும் பார்க்க தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கியது.

6.05 pm : பேட்ட விழா நடக்கும் அரங்கத்திற்குள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நுழைந்தார். அவரின் வருகையையொட்டி ரசிகர்கள் அனைவரும் “தலைவா” என்று கோஷம் எழுப்பி வரவேற்றார்.

6.00 pm : நிகழ்ச்சி நடக்க இருக்கும் அரங்கிற்கு லதா ரஜினிகாந்த் தமது பேரன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் வந்தடைந்தார்.

5.45 pm : இசை வெளியீடு விழா நடக்க இருக்கும் கல்லூரிக்கு வந்தடைந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ரசிகர்கள் படை சூழ ஆரவாரத்துடன் வரவேற்பு.

5.30 pm : பேட்ட இசை வெளியீடு நிகழ்ச்சிக்காக தனியார் கல்லூரியில் பிரம்மாண்டமாக மேடை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

5.00 pm : பேட்ட இசை வெளியீடு விழா இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதில் ரஜினிகாந்த் உட்பட படக்குழுவினரும் கலந்துக் கொண்டு பேசுகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Petta audio launch today

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X