ரிலீஸுக்கு முன்பே பதம் பார்த்த தமிழ் ராக்கர்ஸை சமாளிக்குமா பேட்ட டீம்?

petta full movie online download banned: விதவிதமாக தனது வெப்சைட் முகவரியை மாற்றிக்கொண்டு, தமிழ் ராக்கர்ஸ் இப்படி சினிமாத் துறையை சூறையாடுவது நிற்குமா?

தமிழ் ராக்கர்ஸைப் பொறுத்தவரை சூப்பர் ஸ்டாரும் ஒன்றுதான்… டூப்ளிகேட் ஸ்டாரும் ஒன்றுதான். யாராக இருந்தாலும் அவர்களின் படத்தை திருட்டுத்தனமாக வெளியிடுவதில் அப்படியொரு குஷி இந்த இணையதளத்திற்கு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கல் ரிலீஸாக ஜனவரி 10-ம் தேதி திரையை அலங்கரிக்கும் பேட்ட படத்திற்கும் அதே மிரட்டல்! ஏற்கனவே முந்தையை 2.0 படத்தை டிஜிட்டல் தரத்துடன் வெளியிட்டு மிரள வைத்தது தமிழ் ராக்கர்ஸ்.

பேட்ட படத்தின் மரண மாஸ் பாடலை படக்குழுவினர் ரிலீஸ் செய்யும் முன்பே திருட்டுத்தனமாக வெளியிட்டு தமிழ் ராக்கர்ஸ் அதிர வைத்ததையும் மறக்க முடியாது. ரிலீஸுக்கு முன்பே சிங்கிள் டிராக்கை திருடிய தமிழ் ராக்கர்ஸ், பேட்ட முழுப் படத்தையும் திருடுவதில் உறுதி காட்டும் என்பதை படக்குழு எதிர்பார்க்கவே செய்தது.

எனவேதான் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. பேட்ட படத்தை திருட்டுத்தனமாக வெளியிட இணையதளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது. தமிழ் ராக்கர்ஸ் உள்பட சுமார் 3000 இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது.

ஆனால் நீதிமன்றம் இப்படி தடை விதிப்பது இது முதல் முறையல்ல. சர்க்கார், 2.0 உள்பட பல படங்களுக்கும் இப்படி நீதிமன்றம் தடை விதிக்கவே செய்தது. அதையும் மீறி தமிழ் ராக்கர்ஸ் தனது அடாவடியை தொடரவே செய்கிறது. ஜனவரி 9-ம் தேதி இரவே வெளிநாடுகளில் ரிலீஸ் ஆகும் பேட்ட படத்தை, படக் குழுவினர் தாய்க் கோழி போல அடை காத்திருக்கிறார்கள். பருந்தாக சுற்றும் தமிழ் ராக்கர்ஸ் ஏற்கனவே பாடலை ரிலீஸுக்கு முன்பே சுட்ட மாதிரி படத்தை சுட்டுத் தள்ளாமல் இருக்குமா?

விதவிதமாக தனது வெப்சைட் முகவரியை மாற்றிக்கொண்டு, தமிழ் ராக்கர்ஸ் இப்படி சினிமாத் துறையை சூறையாடுவது நிற்குமா? என்று தெரியவில்லை.

பேட்ட சிறப்பு கொண்டாட்டம் பற்றிய முழு விவரங்களுக்கு…

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

×Close
×Close