/tamil-ie/media/media_files/uploads/2020/05/nawazuddin-siddiqui-wife-sends-divorce-notice.jpg)
nawazuddin siddiqui wife sends divorce notice
நடிகர் நவாசுதீன் சித்திக்கின் மனைவி ஆலியா சித்திக், அவருக்கு சட்டப்பூர்வ அறிவிப்பை அனுப்பியுள்ளார். மேலும் அவர் “திருமணத்தை முடிக்க” விரும்புவதால், அந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார்.
திரையரங்கம் திறப்பு? இதை நிச்சயம் பின்பற்றணும் : படத்தொகுப்பு
Indianexpress.com ஆலியாவை தொடர்பு கொண்டபோது, விவாகரத்து கோரி, நடிகருக்கு சட்டப்பூர்வ அறிவிப்பை அனுப்ப்பியதை அவர் உறுதிப்படுத்தினார். அவர், "நான் அவருக்கு லீகல் நோட்டீஸை அனுப்பியுள்ளேன், ஆனால் அவர் பதிலளிக்கவில்லை" என்றார்.
இந்த முடிவை எடுக்க வழிவகுத்த பிரச்சினைகள் என்ன என்று கேட்டபோது, “என்னால் இப்போது பிரச்சினைகள் குறித்து பேச முடியாது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக எங்களுக்குள் பிரச்சினைகள் உள்ளன. இப்போது, பூட்டுதலின் போது, இந்த திருமணத்தை முடித்துக் கொள்ளலாம் என்று நான் நினைத்தேன். அவர் முசாபர்பூருக்குப் புறப்படுவதற்கு முன்பே நான் நோட்டீஸ் அனுப்பியிருந்தேன். அவர் இன்னும் என் அறிவிப்புக்கு பதிலளிக்கவில்லை, எனவே நான் இப்போது சட்ட வழியை எடுக்க வேண்டும்.” என்றார் ஆலியா சித்திக்.
ஆலியாவின் வழக்கறிஞர் பி. சி. தாஸ்குப்தா அண்ட் கோ வெளியிட்ட வீடியோ அறிக்கையில், “நாங்கள் திரு நவாசுதீன் சித்திக்கிற்கு சட்ட அறிவிப்பை அனுப்பியுள்ளோம். இந்த அறிவிப்பை எங்கள் கிளைண்ட் திருமதி ஆலியா சித்திக் 2020, மே 7-ஆம் தேதி அனுப்பினார். கோவிட் 19 காரணமாக, நோட்டீஸை ஸ்பீட் போஸ்ட் மூலம் அனுப்ப முடியவில்லை. இந்த அறிவிப்பு மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் மூலமாகவும் அனுப்பப்பட்டுள்ளது. எங்கள் கிளைண்ட் திருமதி சித்திக்கும் வாட்ஸ்அப் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இருப்பினும் திரு நவாசுதீன் சித்திக் இன்று வரை பதிலளிக்கவில்லை. அவர் அறிவிப்பு தொடர்பாக அமைதியாக இருக்கிறார். அதை புறக்கணிக்கிறார் என்று நினைக்கிறேன். பராமரிப்பு மற்றும் விவாகரத்து என்று கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பிரச்னைகள் என்ன, குற்றச்சாட்டுகள் என்ன என்பது குறித்த விவரங்களுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆனால் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை, அவை திரு சித்திக் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் குறித்து சென்ஸிடிவானவை” என்று கூறியிருந்தார்.
ஆராவாரம் இல்லா ஆரம்பம் – இனி விளையாட்டு போட்டிகள் இப்படித்தான் (புகைப்படத் தொகுப்பு)
நாங்கள் indianexpress.com - காக நடிகர் நவாசுதீன் சித்திக்கை தொடர்பு கொள்ள முயற்சித்தோம், ஆனால் முடியவில்லை. தற்போது அவருடைய பதிலுக்காக காத்திருக்கிறோம்.
நவாசுதீன் சித்திக் - ஆலியா தம்பதியினருக்கு 9 வயதில் மகனும், 5 வயதில் மகளும் உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.