ஆராவாரம் இல்லா ஆரம்பம் – இனி விளையாட்டு போட்டிகள் இப்படித்தான் (புகைப்படத் தொகுப்பு)

உங்கள் வெற்றியை கொண்டாடும் போது, உங்களைச் சுற்றி 10 பேர் நின்று கைத்தட்டினால் எப்படி இருக்கும். சும்மா ஜிவ்வுன்னு ஏறும். வெற்றிக் கொடுத்த மகிழ்ச்சியை விட, மற்றவர்களின் பாராட்டு நம்மை குளிர வைக்கும். அதுவே, ஒரு விளையாட்டு வீரன் வெற்றி பெறும் போது, அவன் முன்னாள் ஆயிரக்கணக்கான மக்கள்…

By: May 19, 2020, 11:57:56 AM

உங்கள் வெற்றியை கொண்டாடும் போது, உங்களைச் சுற்றி 10 பேர் நின்று கைத்தட்டினால் எப்படி இருக்கும். சும்மா ஜிவ்வுன்னு ஏறும். வெற்றிக் கொடுத்த மகிழ்ச்சியை விட, மற்றவர்களின் பாராட்டு நம்மை குளிர வைக்கும். அதுவே, ஒரு விளையாட்டு வீரன் வெற்றி பெறும் போது, அவன் முன்னாள் ஆயிரக்கணக்கான மக்கள் நின்று அவனை உற்சாகப்படுத்தினால் எப்படி இருக்கும். மூன்று மாதம் முன்பு வரை விளையாட்டு உலகம்  அப்படித் தான் இயங்கி வந்தது. ஆனால்….

இனி  மாற்றம் காணப் போகிறது. காரணம், கொரோனா… சமூக இடைவெளி பின்பற்றி வீரர்கள் விளையாட வேண்டும், அதுவும் ரசிகர்களே இல்லாத காலியான வெற்று அரங்கத்தில். அதற்கு தங்களை மனதளவில் பழகிக் கொள்ள வேண்டும்.

இனி அப்ரிடியுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை – யுவராஜ், ஹர்பஜன் முடிவு

அதற்கு ஒரு சான்றாய் அமைந்திருக்கிறது சமீபத்தில் நடந்த கால்பந்து போட்டி ஒன்று. அதுபற்றிய புகைப்படத் தொகுப்பை இங்கே நீங்கள் பார்த்து முடிக்கும் போது, விளையாட்டுகள் இனி எப்படி இருக்கப்  போகிறது என்பதை புரிந்து கொள்வீர்கள். ஜெர்மனி கிளப் அணிகளான Borussia Dortmund மற்றும் FC Schalke ஆகிய அணிகள் மோதின. போட்டியும் ஜெர்மனியில் நடைபெற்றது.

ஆள் ஆரவாரமில்லாத Iduna Park . (Source: Twitter/@s04_en) பொருசியா டோர்ட்மண்ட் அணி வீரர்கள் பயிற்சியின் போது (Source: AP Photo) தனி நபர் இடைவெளியுடன் கோல் அடித்ததை கொண்டாடும் Erling Haaland  (Source: Twitter/@BlackYellow) 1.5 மீட்டர் தனி நபர் இடைவெளியுடன் அமர்ந்திருக்கும் மாற்று வீரர்கள் (Source: AP Photo) டோர்ட்மண்ட் வீரர் ரபேல் அடிக்கும் அணியின் இரண்டாவது கோல் (Source: Twitter/@Bundesliga_EN) சக வீரர் ஜுலியனுடன் முழங்கை மோதி வாழ்த்துகளை பரிமாறிக் கொள்ளும் ரபேல் (Source: AP Photo) ஸ்கால்க் அணியின் சலிஃப் சேனிடம் இருந்து பந்தை பறிக்கும் முயற்சியில் எர்லிங் ஹாலந்த் (Source: Reuters) வெற்று அரங்கத்தில் கைகளை உயர்த்தி வெற்றியை கொண்டாடும் தோர்கன் ஹசார்டு (Source: Twitter/Bundesliga_EN) 4-0 என்று ஸ்கால்க் அணியை துவம்சம் செய்த டோர்ட்மெண்ட் அணி வீரர்கள், டிவியில் போட்டியை பார்த்து மகிழ்ந்த ரசிகர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்த காட்சி

இனி இப்படித்தான் ஒவ்வொரு விளையாட்டும்!

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Latest sports news football match in empty stands sports gallery

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X