/tamil-ie/media/media_files/uploads/2020/06/a86-1.jpg)
AL Raghavan death, AL raghavan passed away
AL Raghavan Death: பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம் அவர்களின் கணவரும் பிரபல பின்னணி பாடகருமான ஏ.எல்.ராகவன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் இன்று காலமானார்.
’பென்குயின்’ விமர்சனம்: ‘ராட்சசன்’ சாயலில் மற்றுமொரு படம்
தமிழ் சினிமாவின் ஆரம்ப கால பிரபல பாடகர்களில் ஏ.எல்.ராகவனும் ஒருவர். 1950ம் வருடம் ”கிருஷ்ண விஜயம்” என்ற படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கிய இவர் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல படங்களில் பாடியுள்ளார். பழம்பெரும் இசையமைப்பாளர்களான எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி, டி.ஆர்.பாப்பா, சுதர்சனம் மாஸ்டர் உள்ளிட்டோரின் இசையில் பல பாடல்களை பாடி ஹிட் கொடுத்துள்ளார்.
பென்குயின்: வெளியாவதற்கு 2 மணி நேரம் முன்பே ரிலீஸ் செய்த தமிழ்ராக்கர்ஸ்
”எல்லாருக்கும் காலம் வரும்”, “அன்று ஊமை பெண்ணல்லோ”, “ஒன்ஸ் அ பாப்பா” போன்ற பல புகழ்பெற்ற பாடல்களை பாடியுள்ள இவர் சினிமா நடிகை ’ரத்த கண்ணீர்’ புகழ் ஏ.எம்.ராஜம் அவர்களை திருமணம் செய்து கொண்டார். சமீப காலமாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மாரடைப்பால் காலமானார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.