இசைஞானி இளையராஜாவின் 76வது பிறந்தநாள் இன்று(ஜூன்.2) கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
தொல்.திருமாவளவன் எம்.பி., விடுதலை சிறுத்தைகள் கட்சி
சென்னை வடபழனி பிரசாத் ஸ்டூடியோவிற்கு வந்த இளையராஜாவுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "இளையராஜா மற்றும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இருவரும் இணைந்து இன்று ஒரே மேடையில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மரியாதை நிமித்தமாக இளையராஜாவை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தேன். சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்றதை கூறி வாழ்த்துப் பெற்றேன்" என்றார்.
மேலும் படிக்க - 'வெற்றியும் தோல்வியும் பொருள்சார் மக்களுக்கே; எனக்கில்லை' - இளையராஜா
அன்புமணி ராமதாஸ், பாமக
"இன்று 75-ஆவது பிறந்தநாள் காணும் இசைப்பெருங்கடல் இளையராஜாவுக்கு எனது வாழ்த்துகள். அவர் ஆற்றிய பணிகளுக்கு "பாரத ரத்னா" மாலை அணிவித்து மரியாதை செய்வதே சரியான அங்கீகாரமாக அமையும்!!!" என்று தெரிவித்துள்ளார்.
June 2019
கே பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட்
இளையராஜா பல்லாண்டு வாழ வாழ்த்துவதோடு, இன்னும் பல சாதனைகள் நிகழ்த்த போற்றுகிறோம் என மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதவிர, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.