Ponmagal Vandhal : சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பார்த்திபன், பிரதாப் போத்தன், பாக்யராஜ், பாண்டியராஜன், தியாகராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ’பொன்மகள் வந்தாள்’. இன்று அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது.
மாதம் ரூ9250 வரை பென்ஷன்! எல்ஐசி-யின் இந்தப் புதிய திட்டத்தை கவனித்தீர்களா?
நிர்பயா பாலியல் வன்கொடுமை நடந்து 8 வருடங்களில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இன்னும் பல பயங்கரமான குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. சில படங்களும் இந்த விஷயத்தை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளன. அதுபோல ஆழமான கதை தான் பொன்மகள் வந்தாள்.
முதலில் ஊட்டியில் 10 வயதுக் குழந்தையை ஜோதி என்கிற ஒரு பெண் துப்பாக்கி முனையில் கடத்திவிட்டதாகவும் காப்பாற்றப் போன இரு இளைஞர்களையும் அவர் சுட்டுக்கொன்றதாகவும் அந்த சைக்கோ கொலைக் குற்றவாளியைத் தேடி வருவதாகவும் போலீஸார் கூறுகின்றனர். பின்னர் திருப்பூரில் இருந்து ஜெய்ப்பூர் தப்பித்துச் செல்ல இருந்த சைக்கோ ஜோதியைப் பிடித்துவிட்டதாகவும், குழந்தையை மறைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டச் சொல்லும்போது, பெண் குற்றவாளி எங்களைச் சுட்டதால் நாங்களும் பதிலுக்குச் சுட்டதில் குற்றவாளி இறந்துபோனார். அவர் வடநாட்டைச் சேர்ந்த பெண் என்று போலீஸார் செய்தியாளர்கள் முன் தெரிவிக்கின்றனர். இது 2004-ம் ஆண்டில் நடக்கிறது.
இது நடந்து 15 ஆண்டுகள் கழித்து இதில் மறைந்திருக்கும் மர்மம் குறித்து அறிந்துக் கொள்ளும் வகையில் இந்த வழக்கை தூசு தட்டி கையில் எடுக்கிறார் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜோதிகா. இதற்கு அவரது அப்பா பெட்டிசன் பெத்துராஜ் (பாக்யராஜ்) ஊக்கமளிக்கிறார். ஒரு கொலைகாரிக்காக வாதடுவதா என ஊர் மக்கள் வெண்பா மீது வெகுண்டெழுகிறார்கள். இந்த அவமானங்களைத் தாண்டி ஏன் இந்த வழக்கைக் கையில் எடுக்கிறார், அதுவும் வழக்கறிஞராக அவர் வாதாடும் முதல் வழக்கு, இதற்கான விடை தான் மீதிக் கதை.
வலி, வேதனை, துயரம், ஆற்றாமை, அழுகை, பதற்றம், உறுதி, துணிச்சல், எதிர்ப்பு, அன்பு என அத்தனை உணர்வுகளையும் அப்படியே திரையில் கொண்டு வந்து அபாரமான நடிப்பால் ஜோதிகா மனதில் நிற்கிறார். ஜோதிகா ஓவர் ஆக்டிங் செய்வார், என்பதை உடைத்தெறிந்துள்ளார். வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியுள்ளார்.
பிரதாப் கே.போத்தன், பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன் என்று ஐம்பெரும் இயக்குநர்கள் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். தன் வழக்கமான குணநலன்களுடன் கூடிய கதாபாத்திரத்தில் பாக்யராஜ் நிறைவான நடிப்பை வழங்கியுள்ளார்.
‘பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு’ – இந்திய டெஸ்ட் தொடருக்கான மைதானங்களை அறிவித்த ஆஸி.,
ராம்ஜியின் ஒளிப்பதிவும், கோவிந்த் வசந்தாவின் இசையும் பின்னணியும் படத்துக்குக் கூடுதல் பலம் சேர்த்துள்ளன. ரூபனின் எடிட்டிங் நேர்த்தியின் உச்சம். பெண் குழந்தையை இப்படி பேச வேண்டும், இப்படி உடை உடுத்த வேண்டும் என சொல்லிக் கொடுக்கும் குடும்பங்கள், இப்படி தான் பெண்ணை மதிக்க வேண்டும் என ஆண் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதில்லை என்பதை பலமாக வலியுறுத்தியிருக்கிறது, ‘பொன்மகள் வந்தாள்’
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.