அஜித் ஹீரோயினுக்கு புரபோஸ் செய்யும் ரஜினி வில்லன் – வைரல் படங்கள்

ஜூலை 4, 2019 அன்று பூஜா, பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் நவாப் ஷாவை மணந்தார். தம்பதியினர் இப்போது மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.

By: May 30, 2020, 11:07:04 AM

இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில், தல அஜித்தின் சூப்பர் ஹிட் திரைப்படமான ‘ஆசை’ படத்தில் நடிகை பூஜா பாத்ரா அறிமுகமானார். அவருடன் ‘கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்’ படத்திலும் நடித்தார். தவிர, ‘ஓருவன்’ படத்தில் சரத்குமார் ஜோடியாக முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் சோனு எஸ் அலுவாலியாவை 2002-ல் திருமணம் செய்துக் கொண்டு, கலிபோர்னியாவில் குடியேறினார் பூஜா. ஆனால் 2011-ல் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள்  விவாகரத்து செய்துக் கொண்டனர்.

WHO -உடன் உறவை முறித்த அமெரிக்கா: ட்ரம்ப் அறிவிப்பு

ஜூலை 4, 2019 அன்று பூஜா, பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் நவாப் ஷாவை மணந்தார். தம்பதியினர் இப்போது மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். இந்நிலையில் பூஜா தனது கணவர் தனக்கு ப்ரபோஸ் செய்யும் படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, “கடந்த ஆண்டு இதே நாளில் எனது கணவர் அவரது அம்மா மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் எனக்கு ப்ரபோஸ் செய்தார். உங்கள் ஆசீர்வாதங்களும், அன்பும் எப்போதும் எங்களுடன் இருக்கட்டும். வி மிஸ் யூ” என்று குறிப்பிட்டிருந்தார். இந்தப் படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘கஜேந்திரா’ படத்தில் விஜயகாந்த்துடனும், ‘சீமராஜா’வில் சிவகார்த்திகேயனுடனும், ‘தர்பார் ‘படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடனும் வில்லனாக நடித்தவர் தான் நவாப் ஷா.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Pooja batra nawab shah proposing images rajinikanth ajith

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X