’சிங்கக்குட்டி பொறந்திருக்கான்’: மகிழ்ச்சியில் ‘பூவே பூச்சூடவா’ நடிகர்!

அக்டோபர் 5-ம் தேதி குழந்தையை எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

அக்டோபர் 5-ம் தேதி குழந்தையை எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

author-image
WebDesk
New Update
Poove Poochudava Karthick Vasu blessed with baby boy

கார்த்திக் வாசு - நந்துஜை

TV News Tamil: இந்த லாக் டவுன் பல உயிர்களை பறித்திருக்கிறது, நிறைய பேரை பாதித்திருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் சிலர் தங்கள் குடும்பத்தினருடன் வாழ்க்கையின் புதிய அத்தியாயங்களில் காலடி எடுத்து வைக்கவும் உதவி புரிந்திருக்கிறது. அதோடு சிலரின் குடும்பத்தில் புதிய வரவுகள் அவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment

தர்மபுரி டிஎஸ்பி திடீர் மரணம்: பிறந்தநாளில் சோகம்

Advertisment
Advertisements

அந்த வகையில் பூவே பூச்சூடவா சீரியல் நடிகர் கார்த்திக் வாசு தற்போது அப்பாவாகியிருக்கிறார். கனா காணும் காலங்கள், காதல் முதல் கல்யாணம் வரை உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான கார்த்திக் வாசு, தற்போது பூவே பூச்சூடவா தொடரில் நடித்து வருகிறார். கடந்த 2018-ம் ஆண்டு நந்துஜை என்பவரை இவர் திருமணம் செய்துக் கொண்டார்.

ஆசியாவின் மிகப்பெரிய பெண் யானை கல்பனா மரணம்! வனத்துறையினர் அஞ்சலி…

இதற்கிடையே நந்துஜை கர்ப்பமாக இருக்கும் படங்கள் செப்டம்பர் முதல் வாரத்தில் இணையத்தில் வெளியாகின. அப்போது அக்டோபர் 5-ம் தேதி குழந்தையை எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தான் ஆண் குழந்தைக்கு அப்பாவாகியிருப்பதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் கார்த்திக் வாசு, விரைவில் குழந்தையின் புகைப்படத்தை வெளியிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து சின்னத்திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: