Adithya Varma : விக்ரம் மகன் துரூவ் நடிக்கும் வர்மா படம், ஆதித்யா வர்மா என்ற பெயர் பெற்று புதுப் பொலிவுடன் வேலைகள் மீண்டும் தொடங்கியுள்ளது.
தெலுங்கில் விஜய்தேவரகொண்டா, ஷாலினின் பாண்டே நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படம் நூறு கோடியை தாண்டி வசூலை வாரி குவித்தது மட்டுமல்லாமல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அறிமுகமாவார் என அறிவிக்கப்பட்டு, அந்த படத்திற்கு வர்மா எனப் பெயரிடப்பட்டு, அதனை இயக்குநர் பாலா இயக்கினார்.
Adithya Varma : ஆதித்யா வர்மா
நாயகியாக மேகா எனும் வடமாநில நடிகை நடித்தார். படத்தில் வரும் ஹீரோயின் கதாபாத்திரத்தில் ரைஸாவும் வேலைக்காரி கதாபாத்திரத்தில் ஈஸ்வரி ராவும் நடித்திருந்தனர். இம்மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட படம், கடைசி நேரத்தில், பாலா இயக்கத்தில் குறை என அறிவிக்கப்பட்டு, மறு உருவாக்கம் செய்யப்படும் என ஈ4 எண்டர்டெயின்மெண்ட் அறிவிப்பால், கோலிவுட்டே கதிகலங்கியது.
”துருவ்வின் எதிர்கால நலன் கருதி...” - வர்மா படத்திலிருந்து விலகிய பாலா விளக்கம்!
இந்நிலையில், வர்மா படத்தின் தலைப்பை ஆதித்யா வர்மா என மாற்றியுள்ளனர். இப்படத்தை கிரிசாயா எனும் இயக்குநர் இயக்கவுள்ளார். இவர் அர்ஜுன் ரெட்டி படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என கூறப்படுகிறது.
வர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்... யார் ஹீரோயின் தெரியுமா?
இந்த படத்தில் அக்டோபர் எனும் பாலிவுட் படத்தில் நடித்த நாயகி பனிடா சந்து நடிக்க உள்ளார். மேலும், ரைஸா கதாபாத்திரத்திற்கு பிரியா ஆனந்தை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளனர்.
February 2019
ஆக மொத்தம் துருவ்வை தவிர படத்தில் உள்ள அனைவரும் மாற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.