scorecardresearch

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியை பாதியில் நிறுத்திய புனே காவல்துறை; காரணம் இதுதான்

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம்; ஒலி மாசுபாட்டைத் தடுக்க உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த இரவு 10 மணி கெடுவை சுட்டிக்காட்சி புனே காவல்துறை நடவடிக்கை

ar rahman
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் (கோப்பு படம்)

ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சி (லைவ் கான்சர்ட்) மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஞாயிற்றுக்கிழமை பாதியில் நிறுத்தப்பட்டது. ஒலி மாசுபாட்டைத் தடுக்க உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த இரவு 10 மணி கெடுவை புனே காவல்துறை இசை நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு நினைவூட்டி, நிகழ்ச்சியை நிறுத்தியது.

இதையும் படியுங்கள்: மாரியை காப்பாற்ற வரும் முத்துப் பேச்சி: ஜீ தமிழ் சீரியலில் தேவயானி மாஸ் என்ட்ரி

புனேயில் உள்ள ராஜா பகதூர் மில் சாலையில் உள்ள தி மில்ஸில் ஃபீடிங் ஸ்மைல்ஸ் மற்றும் 2BHK ஏற்பாடு செய்த நேரடி இசை நிகழ்ச்சியில் ரஹ்மான் பாடிக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு போலீஸ் அதிகாரி மேடையில் சென்று, தனது கைக்கடிகாரத்தில் இரவு 10 மணிக்கான காலக்கெடுவைக் காட்டி, நிகழ்ச்சியை நிறுத்துமாறு ரஹ்மான் மற்றும் இசை கலைஞர்களைக் கேட்டார். இதனையடுத்து ரஹ்மான் நிகழ்ச்சியை நிறுத்திவிட்டு மேடையிலிருந்து சென்றார்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இரவு 10 மணிக்குப் பிறகு இசை நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை என்று புனே நகர காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். “எனவே இரவு 10 மணிக்கு மேல் சில நிமிடங்களில், நேரலை நிகழ்ச்சியை நிறுத்திவிட்டு சட்டத்தை பின்பற்றுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு காவல்துறை நினைவூட்டியது. ஏற்பாட்டாளர்கள் காவல்துறைக்கு ஒத்துழைத்து நிகழ்ச்சியை முடித்து வைத்தனர்” என்று அந்த அதிகாரி கூறினார்.

இதுகுறித்து அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பியபோதிலும் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் கருத்துக்கு கிடைக்கவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Pune police stop ar rahman concert midway citing court mandated 10 pm deadline

Best of Express