/tamil-ie/media/media_files/uploads/2019/12/Queen-Web-Series-1.jpg)
Queen Web Series 2nd season, jayalalithaa biopic, ramya krishnan, gautham menon
Queen Season 2 : இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியிருந்த 'குயின்' வலைத்தொடரின் இரண்டாவது சீசன் உருவாகவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எம்.எக்ஸ் பிளேயரில் வெளியான இத்தொடரை, கௌதமுடன் இணைந்து இயக்குனர் பிரசாந்த் முருகேசனும் இயக்கியிருந்தார்.
சன் டிவி ஆனந்தம்: இந்த சைலண்ட் வில்லியை ஞாபகம் இருக்கா?
தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இத்தொடர், அவர் தனது சோதனை காலங்களை, எவ்வாறு கடந்து வந்தார் என்பதை பேசியது. மனதை ஈர்க்கும் கதை, காட்சியமைப்பு போன்ற காரணங்களால் ’குயின்’ சீரியல் OTT தளத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. அனிதா சிவகுமாரன் எழுதிய ’குயின்’ நாவலை அடிப்படையாகக் கொண்ட, இத்தொடரின் கதையை ரேஷ்மா கட்டாலா எழுதியிருந்தார்.
இது மிகச் சரியான ஜெயலலிதாவின் வாழ்க்கை இல்லை என்றும், சுவாரசியத்திற்காக கற்பனை கலந்து உருவாக்கியுள்ளதாகவும், குயின் வெப் சீரியலின் தயாரிப்பாளர்கள் தெரிவித்திருந்தனர். தற்போது இந்த சீரியலின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அதேநேரத்தில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ’தலைவி’ எனும் படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். இதில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கோ கொரோனா கோ! கோஷம் போட்டா குறையுமோ? தெறிக்கவிடும் தெருக்குரல் அறிவு!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.