கோ கொரோனா கோ! கோஷம் போட்டா குறையுமோ? தெறிக்கவிடும் தெருக்குரல் அறிவு!

இந்த கொரோனா காலத்திலும் சமூகத்தில் நிலவும் எதார்த்தமும், வேறுபாட்டையும் சாடும் வகையில் அமைந்துள்ளது இந்த பாடல்!

Corona outbreak Vanakkam Virus Tamil Rap Song by Therukkural Arivu
Corona outbreak Vanakkam Virus Tamil Rap Song by Therukkural Arivu

Corona outbreak : Vanakkam Virus Tamil Rap Song by Therukkural Arivu : காஸ்ட்லெஸ் கலெக்டிவ் மற்றும் நீலம் ப்ரொடெக்சனில் பங்கேற்று, சமூகத்திற்கு தேவையான பாடல்களை ரேப் இசை மூலம் பாடி வருபவர் அறிவு. தெருக்குரல் என்ற பெயரில் நம்முடைய தெருக்களில் நடக்கும் அரசியல் அவலங்களை வார்த்தைகளாக்கி, வார்த்தைகளுக்கு இசை உயிர் கொடுத்து மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பவர் அறிவு.

கொரோனா வைரஸ் பரவலுக்கு பிறகு இந்தியாவில் நடைபெற்றுவரும் மாற்றங்கள் குறித்து வணக்கம் வைரஸ் என்ற பெயரில் பாடல் ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். இந்த பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் படிக்க : கொரோனாவுடன் 100 நாட்கள்…இரண்டே இறப்புகள்… கேரளாவில் இது எப்படி சாத்தியம்?

கொரோனா காலத்திலும் சமூகத்தில் நிலவும் பல்வேறு அவலங்களை எடுத்துரைக்கிறார். சாதி, சமூக வேறுபாடுகளை களைய விரும்பும் அவரின் எண்ணம் இந்த பாடல்களின் வார்த்தைகளில் வெளிப்படுகிறது.

மனித மாண்பை மறந்த நாட்டில் மருந்தடிக்க மனசில்லை! ஊருக்கு போகிற வழியில் சாகிற குழந்தை நம்புது தாய்நாட்டில். ஆயிரம் வருச பழைய மூளை வெளியே வருது மணியாட்ட!  என்று சமூகத்தில் நிலவும் எதார்த்தமும், வேறுபாட்டையும் அவர் சாடுகிறார்.

கோ கொரோனா கோ கோஷம் போட்டா குறையுமா? விலகுமோ விலகுமோ விளக்கு போட்டா எரியுமோ? என்று ஆரம்பித்து  கோ கொரோனா கோ கோஷம் போட்டா குறையுமா? விலகுமோ விலகுமோ விளக்கு போட்டா எரியுமோ? என்று அந்த பாடலை அவர் முடித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Corona outbreak vanakkam virus tamil rap song by therukkural arivu went viral on social media

Next Story
சுட்டெரிக்கும் சூரியன்… வெயிலில் இருந்து பாதுகாக்க என்ன பண்ணலாம்? டிப்ஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com