டாப்ஸியின் காமெடி படத்தில் இணைந்த ராதிகா!

டாப்ஸியுடன் இருக்கும் படத்தையும், வீடியோவையும் பகிர்ந்து கொண்ட ராதிகா, "டெவில்ஸ் அட் வொர்க் @ டாப்ஸி" எனக் கேப்ஷன் கொடுத்திருந்தார்.

டாப்ஸியுடன் இருக்கும் படத்தையும், வீடியோவையும் பகிர்ந்து கொண்ட ராதிகா, "டெவில்ஸ் அட் வொர்க் @ டாப்ஸி" எனக் கேப்ஷன் கொடுத்திருந்தார்.

author-image
WebDesk
New Update
Radhika Sarathkumar, Taapsee Pannu

தமிழில் ஒரு சில படங்களில் நடித்த டாப்ஸி பாலிவுட்டில் தனக்கு பொருத்தமான கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார். பிஸியாக சுழன்று கொண்டிருக்கும் அவர், தற்போது ஓர் தமிழ் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். அந்தப் படத்தை அறிமுக இயக்குநர் தீபக் சுந்தரராஜன் இயக்குகிறார். அவர் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் மற்றும் நடிகரான சுந்தர்ராஜனின் மகன். அதோடு இயக்குநர் விஜய்யிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

Advertisment

சூப்பரான இஞ்சி- மிளகு ரசம்: இப்படி செஞ்சு பாருங்க, வாசனை கமகமக்கும்!

இதில் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு, முழு நீள வேடத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது. இந்நிலையில் மூத்த நடிகை ராதிகா சரத்குமாரும் இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ராஜஸ்தானில் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. ராஜஸ்தானில் ஒரு அரண்மனையில் டாப்ஸியுடன் இருக்கும் படத்தையும், வீடியோவையும் பகிர்ந்து கொண்ட ராதிகா, "டெவில்ஸ் அட் வொர்க் @ டாப்ஸி" எனக் கேப்ஷன் கொடுத்திருந்தார்.

Advertisment
Advertisements

ஆரவ்- ராஹீ திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து!

நடிகை டாப்ஸி நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘கேம் ஓவர்’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்ததாக தற்போது காமெடி படத்தில் நடித்து வரும் டாப்ஸி, அடுத்ததாக ஜெயம்ரவியுடன் ஜனகனமன படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Taapsee Pannu Radhika Sarathkumar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: