Pepper Rasam Tamil, Ginger Pepper Rasam Recipe Making Video: மிளகு ரசம், வீடுகளில் தவிர்க்க முடியாதது. இஞ்சி- மிளகு ரசம் வைத்துப் பார்த்திருக்கிறீர்களா? இந்த நோய்த் தொற்றுக் காலத்திற்கு இஞ்சி- மிளகு ரசம் அற்புதமான, அதி அவசியமான உணவு!
எந்தக் காலகட்டத்திலும் ஜலதோஷம், காய்ச்சல் ஆகியவற்றைத் தவிர்க்க இது பெரிதும் கை கொடுக்கும். பத்தே நிமிடத்தில் கமகமக்கும் வாசனையுடன் இஞ்சி- மிளகு ரசம் தயாரிக்க முடியும். எப்படி?
இஞ்சி- மிளகு ரசம் வைக்கத் தேவையான பொருட்கள் வருமாறு: புளி – ஒரு எலுமிச்சை அளவு தக்காளி – 1, இஞ்சி – 2 அங்குல துண்டு, மிளகு – அரை தேக்கரண்டி, சீரகம் – ஒரு தேக்கரண்டி, முழு தனியா – ஒரு மேசை கரண்டி, காய்ந்த மிளகாய் – 2, கொத்துமல்லி தழை – கால் கைபிடி அளவு, கறிவேப்பிலை – கால் கைபிடி அளவு
தாளிக்கத் தேவையானவை: நெய் – ஒரு தேக்கரண்டி, கடுகு – அரை தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி,
பெருங்காயப் பொடி – ஒரு சிட்டிகை அளவு
இஞ்சி- மிளகு ரசம் செய்முறை
புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி, அதில் தக்காளியைப் போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். அரைக்க வேண்டிய பொருட்களான இஞ்சி – 2 அங்குல துண்டு, மிளகு – அரை தேக்கரண்டி, சீரகம் – ஒரு தேக்கரண்டி, முழு தனியா – ஒரு மேசை கரண்டி, காய்ந்த மிளகாய் – 2 ஆகியவற்றை மிக்சியில் போட்டு அரைத்துத் கொள்ளவும்.
தக்காளி, புளி தண்ணீருடன் உப்பு, மிக்சியில் அரைத்தவற்றை சேர்த்து மேலும் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கொத்துமல்லி தழை – கால் கைபிடி அளவு, கறிவேப்பிலை – கால் கைபிடி அளவு சேர்த்துக் கொள்ளவும். கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும். இப்போது சுவையான கமகமக்கும் இஞ்சி- மிளகு ரசம் ரெடி!
மருத்துவக் குணம் கொண்ட இந்த இஞ்சி- மிளகு ரசத்தை ருசித்து, நலமுடன் வாழுங்கள்!
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook
Web Title:Pepper rasam tamil ginger pepper rasam recipe making video
தமிழகத்தில் மதுவிலக்கு இனி கனவுதானா? வாக்குறுதி தரக்கூட முன்வராத கட்சிகள்
அமமுக கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதி ஒதுக்கீடு – டிடிவி தினகரன் அறிவிப்பு
36 வயது… விவாகரத்து… ஆனாலும் மகிழ்ச்சி: திவ்யதர்ஷினி ‘டைமிங்’ வீடியோ
குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ 1000 நிதி : யார் திட்டத்தை யார் காப்பி அடித்தது?
சேவாக்கின் ‘லெஃப்ட் ஹேன்ட் வெர்ஷன்’ இவர்: இந்திய வீரரை புகழ்ந்து தள்ளும் பாக். ஜாம்பவான்